சென்னை நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்தது இந்திய உயர் நீதிமன்றம்
சிறுவர் ஆபாசப் படங்களைப் பார்ப்பதும் அவற்றை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்திருப்பதும் பாலியல் குற்றங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கீழ் குற்றமாகும் என்று இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தச் செயல்பாட்டில், டிஜிட்டல் சாதனங்களில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்தது.
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டம் குறித்த முக்கிய தீர்ப்பில் இந்திய உயர் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்தது.
28 வயது இளைஞர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் சிறுவர் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், குறித்த நபருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை இரத்து செய்தது.
இந்த நிலையில் இன்று மேற்கண்ட உத்தரவினை அறிவித்துள்ளது இந்திய உயர் நீதிமன்றம்.
தீர்வினை அறிவித்த இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜேபி பார்திவாலா ஆகியோர், குறித்த தீர்ப்பினை வழங்குவதில் சென்னை உயர் நீதிமன்றம் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியது.