சினிமா செய்திகள்
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
Ads
 ·   ·  7979 news
  •  ·  5 friends
  • I

    9 followers

4 மாடி கட்டிடங்களை அமைக்க நேற்று முதல் தடை

நுவரெலியா மாவட்டத்தில் 4 தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நேற்று (1) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்தாலோசித்து புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மாகாண ஆளுநரின் தலைமையில் சம்பந்தப்பட்ட பங்குதாரர் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட பணிக்குழுவை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் முன்மொழியப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையானது 38/16/01-06-1978 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நுவரெலியா மாநகர சபைப் பகுதியை நகரப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன், நுவரெலியா பிரதேச சபைப் பகுதியும் நகரப் பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் இல. 154614/01-09-1998 மூலம் அறிவிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இப்பகுதியில் நடக்கும் முறைசாரா வளர்ச்சி, குறைந்த வசதிகள் கொண்ட குடியிருப்புகள், தரமற்ற குடிநீர், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, முறையான வடிகால் அமைப்பு இல்லாததால் நகரின் அழகு படிப்படியாக குறைந்து வருகிறது. இப்பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவதற்கு இது பெரும் தடையாக உள்ளது.

எனவே, நகரில் பாரிய கட்டிடங்களை நிர்மாணிக்காமல் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு நேரத்தைக் கழிக்கும் வகையில் இலகுவான சூழலுடன் திட்டங்களைத் தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான சூழலை உருவாக்கும் வகையில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 283
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads