லெபனானில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் இருமுனை தாக்குதல்
லெபனானில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதன்படி, தெற்கு லெபனானின் நபாதிஹ் (Nabatieh) நகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், அந்த நகரின் மேயர் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், கிழக்கு லெபனானின் அல்-கியாமி (Al-Khiam) நகரில் 10 நிமிடங்களில் 7 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
குறித்த பகுதியில் நேற்று இரவு இந்தத் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இஸ்ரேல் ஒரே இரவில் கிழக்கு லெபனான் மீது அதிகளவான வான்வழித் தாக்குதல்களை நடத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகுமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கிழக்கு லெபனானில் உள்ள 2 கிராமங்களிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லெபனானின் கிழக்கு பெக்கா பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் வசிப்பவர்களுக்கே இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு மணிநேரத்திற்குள் இரண்டு தடவைகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களுக்கு முன்னதாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
000