தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதனிடையே வேட்டையன் படத்தின் மனசிலாயோ, hunter varaar ஆகிய பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
வேட்டையன் டீசரில் போலீசார் என்கவுன்ட்டர் பற்றிய வசனங்கள் இடம்பெற்றிருந்தது. அமிதாப் பச்சன், ரஜினிக்கு உயர் அதிகாரியாக டிரெய்லரில் தோன்றுகிறார். "delayed justice is justice denied" உள்ளிட்ட வசனங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வேட்டையன் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இதில் என்கவுன்ட்டரை ரஜினி ஆதரிப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் இன்று வேட்டையன் படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. சென்னையில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் முடிந்தது. இதனையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva