Category:
Created:
Updated:
கண்டி , வத்தேகம கல்வி வலயத்திற்கு உட்பட்ட குண்டசாலை பிரதேசத்தில் உள்ள “கெஹெலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை” என்ற பாடசாலையின் பெயர் “குண்டசாலை அரச ஆரம்ப பாடசாலை” என மாற்றப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று (16) விடுத்த உத்தரவின் கீழ் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளில் பெயர்களை மாற்றுமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாகாண கல்வி திணைக்களத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “கெஹெலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை” என்ற பாடசாலையின் பெயர் தற்போது “குண்டசாலை அரச ஆரம்ப பாடசாலை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.