சினிமா செய்திகள்
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது."கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
மூத்த நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் காலமானார்
பழம்பெரும் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித
நடிகர் மாதவனும் இயக்குநர்  கே எஸ் ரவிக்குமாரும்
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் வித்தியாசமாக சுவாரசியமாக பதில் சொல்பவர், சமீபத்தில் மாதவன் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி
அரிய ஆவணம்
"7-9-1949"இடையபட்டி நேத்தாஜி பாடசாலை கட்டிட நிதிக்காககலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின்கிந்தனார்காலட்சேபம் 7-9-49 அன்று நடைபெற்றது
மனித வணக்கம்  -  கமல்ஹாசன் கவிதை
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவி
Ads
 ·   ·  2821 news
  •  ·  1 friends
  • 2 followers

ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் இன்று சிதறுண்டு சின்னங்களுக்கு அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிப்படையாகவே தமது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைத்து வருகின்றது. ஆனால் ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் எல்லாம் இன்று சிதறுண்டு சின்னங்களை நம்பியும் சின்னங்களுக்கு அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் இதனூடாக அவர்களிடம் தமிழ் மக்களை வழிநடத்துவதற்கான தூரரோக்கு பார்வை இல்லை என்பதும் புலனாகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (18.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -

தத்தமது சுயநலக் கருத்துக்களை தமிழ் மக்கள் அரசியல் பரப்பில் திணித்துவந்த இதர தமிழ் அரசியல் வாதிகள் இன்று எமது வழிமுறையான அரசியல் தீர்வுடன் அன்னாடப் பிரச்சினையும் அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு வேண்டும் என கருத்துக்களை முன்வைக்க தொடங்கியுள்ளனர். இதனூடாக அவர்களிடம் தமிழ் மக்களை வழிநடத்தவதற்கான தூரரோக்கு பார்வை இல்லை என்ற நிலையே காணப்டுகின்றது

அந்தவகையில் எம்மை பேரம்பேசும் சக்தியாக நாடாளுமன்றம் செல்ல மக்கள் ஆணை வழங்கினால் நிச்சயம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கமான தீர்’வுகளை எம்மால் எட்ட முடியும். அதனை வெற்றிகொள்ளும் வகையிலான பொறிமுறையும் எம்மிடம் உள்ளது.

இதேநேரம் ஒற்றையாட்சி வேண்டாம் சமஸ்டியே வேண்டும் என கோசமிடுபவர்கள் இன்று அதே ஒற்றையாட்சி முறையிலான தேர்தலில் தமக்கு அதிகளவான அங்கத்தவர்கள் கிடைக்க வேண்டும் என அலைகின்றார்கள். இதிலிருந்து தெரிகின்றது அவர்களது நிலைப்பாடுகள்.

அமையப்போகும் நாடாளுமன்றில் நாம் மத்தியல் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்தே செயற்படுவோம். எமது கொள்கையில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.

இதேவேளை மத்தியில் இருக்கும் அரசுகள் தத்தமது கருத்துக்களை நிலைப்பாடுகளை அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூறத்தான் செய்வார்கள். அது அவர்களின் இயல்பு. தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பலம் எமக்கு வழங்குவார்களாயின் மத்திய அரசகளின் அந்த நிலைப்பாட்டை நிற்பந்தங்கள் கொடுத்து எம்மால் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது்

எமது இந்த நம்பிக்கைக்கு எமது கட்சியின் இணக்க அரசியலும் இன நல்லிணக்கமும் மத்தியுடன் நாம் கொண்டுள்ள சோரம் போகாத நிலைப்பாடுமே காரணமாக இருக்கின்றது  

இதேவேளை அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது இளைஞர்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை விளங்கிக் கொண்டவர்கள் அதனை தீர்க்கவேண்டும் என்ற அக்கறையுடன் இருப்பவர்கள் யார் என்பது தான் இங்கு முக்கியம் பெறுகின்றது.

எனவே தமிழ் மக்களின் அரசியல் புலத்தின் மாற்றம் என்பது இதன் அடிப்படையில் அது எம்மை நோக்கிய எமது கட்சியின் வீணைச்சின்னத்தை நோபக்கிய அணிதிரள்வானதாக தான் இம்முறை அமையும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

  • 1553
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads