இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்தைகளை முதன்முறை ரேடியோவில் கூறிய ஒருவர்தான் பூர்ணம் விஸ்வநாதன். இவர்தான் முதல்முறை அனைத்திந்திய வானொலியில் இந்தியா சுதந்திரமடைந்ததை அறிவித்தார்.
ஒட்டுமொத்த இந்திய மக்களின் ரத்தக் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறியது அந்த குரலினால்தான். அத்தனை எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிய குரல் பூர்ணம் விஸ்வநாதனின் குரல்.
யார் தெரியுமா அவர்?
1921ம் ஆண்டு பிறந்த இவர் பள்ளியில் பயிலும்போதே நாடக மேடையில் ஏறி தனது திறமையை வெளிப்படுத்தினார். இவர் அண்ணன் ஒரு எழுத்தாளர். அவரது உதவியுடன் ஆல் இந்திய ரேடியோவில் இணைந்தார். ஒரு செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் தொடர்ந்தார். பின் சொந்தமாக ஒரு நாடகக்குழு ஆரம்பித்து ஏராளமான நாடகங்களை மேடை ஏற்றினார்.
தன் 20 ஆண்டுக்காலத்தை டெல்லியில் கழித்த அவருக்கு, எழுத்தாளர் சுஜாதாவின் அறிமுகம் கிடைத்தது. சுஜாதாவின் ஆலோசனை பேரில் சென்னைக்கு பணியிடம் மாற்றம் செய்து 1965ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். சுஜாதா எழுதிய 10 நாடகங்களை மேடையில் அரங்கேற்றினார். அப்படியே சினிமாத்துறையிலும் அறிமுகமான இவர், இதுவரை சுமார் 80 படங்களில் நடித்திருக்கிறார். வருஷம் 16, வறுமையின் நிறம் சிவப்பு, தில்லு முல்லு, மகாநதி, மூன்றாம் பிறை, புதுப்புது அர்த்தங்கள், கேளடி கண்மணி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
இப்படி கலைத்துறையில் நடிப்பிலும், நாடகத்திலும், குரலிலும் கலக்கி வந்த இவர் 2008ம் ஆண்டு உயிரிழந்தார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva