சினிமா செய்திகள்
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
Ads
 ·   ·  1613 news
  •  ·  0 friends
  • 1 followers

பெரும் இராஜதந்திர நெருக்கடி - இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கின்றதா கனடா?

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பில் இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையில் இராஜதந்திர நெருக்கடி அதிகரித்துள்ள பின்னணியில் இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் சாத்தியமானது என கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா மீதான சாத்தியமான தடைகள் பற்றி கேள்வியெழுப்பிய போது, "அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக" அமைச்சர் ஜோலி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கனேடிய குடிமக்களை குறிவைக்கும் குற்றச் செயல்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தியிருந்தார்.

பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளில் இந்தியாவின் முகவர்கள் ஈடுபட்டிருப்பதற்கான "தெளிவான ஆதாரங்கள்" குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கவலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது, கனடா காலில் தன்னைத்தானே சுட்டுக்கொள்வது போன்றது என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இன்போமெரிக்ஸ் மதிப்பீடுகளின் பொருளாதார நிபுணர் சங்கநாத் பந்தோபாத்யாய் கருத்து வெளியிடுகையில்,

“கனேடிய வணிகங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன, அதன் வளர்ச்சி மற்றும் வருமானம் அதிகமாக உள்ளது. கனடிய ஓய்வூதிய நிதிகள் இந்தியாவில் 75 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.

600 க்கும் மேற்பட்ட கனேடிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன, மேலும் 1,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையில் தீவிரமாக வணிகத்தைத் தொடர்கின்றன” என்று பந்தோபாத்யாய் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரத் தடைகள் விவசாயத் துறையில், குறிப்பாக இந்தியாவிற்கு கனடாவின் பருப்பு ஏற்றுமதியில் எவ்வாறு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.

“கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்புகளின் முக்கிய ஆதாரமாக இந்தியா உள்ளது. கனடா, அவுஸ்திரேலியா போன்ற போட்டியாளர்களிடம் பருப்புக்கான அதன் சந்தைப் பங்கை இழக்கும் அபாயம் உள்ளது.

அவுஸ்திரேலியாவின் பருப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் சந்தையில் பெருகிய முறையில் போட்டித்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல், அவுஸ்திரேலியா இந்தியாவுக்கான பருப்பு ஏற்றுமதியை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கனேடிய பருப்பு ஏற்றுமதியில் தாக்கம்குறிப்பிடத்தக்கதாக இல்லை என்றாலும், இராஜதந்திர நெருக்கடி இந்திய இறக்குமதியாளர்களின் நம்பிக்கையை சிதைக்கக்கூடும்” என்றார்.

எவ்வாறாயினும், இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) அதன் பங்களிப்பு வெறும் 0.57 சதவீதமாக இருப்பதால், இந்தியாவுக்கு எதிராக கனடா சிறிய செல்வாக்கைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • 1110
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads