Ads
திருமணத்தில் நடனமாடிய நபர் மாரடைப்பால் பலி
மத்திய பிரதேச மாநிலம் ரேவா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 32 வயது இளைஞர் ஒருவர் மகிழ்ச்சியுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.அப்போது, திடீரென்று நெஞ்சைப் பிடித்தபடி கீழே விழுந்தார்.
இதைப் பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தற்போது, இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிக் கொண்டிருந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது,
Info
Ads
Latest News
Ads