மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகிறது. இதற்கிடையே அந்தத் திரைப்படம் கொரோனாவுக்கு பிறகு வேறு எந்த படமும் செய்யாத சாதனையைப் படைத்துள்ளதாக சீன தூதர் பாராட்டியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமாக வெளியான மகாராஜா தாறுமாறான ஹிட் அடித்தது. கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் வெளியான இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. விஜய் சேதுபதிக்கு சோலோ ஹீரோவாக ஒரு கம்பேக் படமாகவும் இது அமைந்தது.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஆக்ஷன் த்ரில்லர் படமான மகாராஜா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவிலும் வெளியானது. அங்கும் இது மிகப் பெரிய வசூல் சாதனையைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப சீனாவிலும் இந்தப் படம் மிகப் பெரியளவில் ஹிட் அடித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு மகாராஜா வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், இப்போது அங்கு ₹100 கோடி கிளப்பில் நுழையப் போகிறது.
கொரோனாவுக்கு பிறகு சீனாவில் அதிக தொகை வசூலித்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளதாகச் சொல்லி விஜய் சேதுபதி உள்ளிட்ட படக் குழுவினருக்கு சீன தூதரக அதிகாரி பாராட்டு தெரிவித்தார். மேலும், சீனாவில் மகாராஜாவின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தொடர்பாகவும் இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் பக்கத்தில் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மேலும், "கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவில் அதிக வசூல் செய்த இந்தியப் படமாக மகாராஜா மாறியுள்ளது. மகாராஜா இதுவரை ₹91.55 கோடியை வசூலித்துள்ளது. வெல் டன்" என்று பதிவிட்டுள்ளார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva