நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உணர்வைத் தெரிவிக்க, அப்போது சென்னைக்கு வரவிருந்த நேருவுக்கு, விமான நிலையத்தில் மிகப் பெரும் அளவில் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என கழகத்தின் முடிவை அண்ணா தெரிவித்திருந்தார்.
அப்போதெல்லாம் கழகத்திற்கு அதிக நிதி வசதி கிடையாது. இது போன்ற நிலைமைகள் ஏற்படும்பொது எம்.ஜி.ஆரும், நானும் தான் அதற்கான முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ், எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் ஆகிய சினிமா கம்பெனிகளுக்குச் சொந்தமான தையல் மிஷின்கள், இரவு பகலாக கறுப்புக் கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன.
அண்ணாவும் மற்ற முன்னணி தலைவர்களும் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர். போலீஸ் என்னையும் எம்.ஜி.ஆரையும் கண்கானித்தது.
மறுநாள் அதிகாலை நாலு மணிக்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் எனக்கு போன் செய்து "இன்னும் சிறிது நேரத்தில் உங்களைக் கைது செய்ய வரப்போகிறோம், தயாராக இருங்கள்" என்றார். அதன்படி நான் கைது செய்யப்பட்டு மைலாப்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டேன்.
அங்கே போனவுடன், எனக்கு முன்பாக எம்.ஜி.ஆரைக் கைது செய்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் என்ற தகவல் தெரிந்தது. நான், அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம், "என்னையும் அவர் கூடவே இருக்கும்படி சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பிவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டேன். இரு காவல் நிலையங்களுக்கு வெளியே பெருங்கூட்டம். இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் நிலைமை சமாளிக்க முடியாது எனக் கூறி எங்கள் இருவரையும் அன்றிரவு முழுக்க வெவ்வேறு காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
மறுநாள் காலை என்னை மத்திய சிறைக்கு அழைத்துப்போனார்கள். அங்கு முதல் மாடியில் முதல் அறையில் கொண்டு போய்விட்டார்கள்.
அங்கே ஆச்சரியம். எனக்கு முன்பாகவே அண்ணன் எம்.ஜி.ஆர் இருந்தார். இருவருக்கும் ஒரே அறை என்றதும் எனக்கு சிறைச்சாலைக் கூடமே சித்திரக்கூடமாகத் தெரிந்தது. மிகச் சிறிய அந்த அறையில் பயன்படுத்துவதற்கு திண்ணை போல ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் அழுக்கடைந்த, மூட்டைப்பூச்சிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள மெத்தை, அதில் படுப்பதும் தூக்குமேடையில் தொங்குவதும் ஒன்றுதான். அதைக் கீழே தூக்கிப் போட்டோம்.
எங்கள் இருவருக்கும் கைகள்தான் தலையணை. வெறும் தரையில் படுத்துக் கொண்டோம். பேச்சுவாக்கில் மனம் திறந்து அவர் தன்னுடைய இளமை கால பருவத்தை நினைவு கூர்ந்தார்.
"கும்பகோணத்தில், என்னுடைய அம்மா அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டுவேலை செய்பவர். அங்கிருந்துதான் சோறும் குழம்பும், பொரியல் எல்லாம் கொண்டு வருவார். எனக்கு அதுவரை பசி தாங்க முடியாது. இடுப்பில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு வயிற்றைப் பிடித்தபடி படுத்திருப்பேன்" என்று அவர் சொன்ன போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்த் துளிகள். இளம் வயதில் பல இன்னல்களைச் சந்தித்தவர் அவர் என்ற விபரம் அப்போது தான் எனக்குத் தெரிந்தது.
பகல் பன்னிரண்டு மணிக்கு எங்களுக்கு உணவு தரப்பட்டது. வட்ட அலுமினியத் தட்டில் சிவப்பு அரிசி சோறு. சிரமப்பட்டு சாப்பிட்டபடியே எம் ஜிஆரைப் பார்த்தேன். அவர் எவ்வித சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுமாதிரி சாப்பாட்டை நான் சாப்பிட்டது இல்லை. என் நிலையை புரிந்து கொண்ட அவர், "சிறு வயதிலேயே சாப்பிட்டுப் பழகி விட்டேன். அதனால் இது எனக்கு புதிது கிடையாது" என்றார்.
அங்கு ஒரு மண்பானை இருந்தது. அருகில் ஒரு தகர டப்பா. அதில் தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொள்ளவேண்டும். அந்த மண்பானைக்கருகில் இரு மண்சட்டிகள் இருந்தன. 'அவை எதற்கு?' என்று அண்ணனிடம் கேட்டேன்.
" அவை இரவு கழிப்பிட வசதிக்காக.." என்றார்.
" எப்படி இதையெல்லாம் பயன்படுத்துவது.." என தர்மசங்கடத்துடன் அவரைக் கேட்க,
"வேறு வழி? இது மாதிரி ஒரே அறையில் ஐந்தாறு பேர் கைதிகளாக இருக்கிறார்களே அவர்களது நிலைமையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்" என என்னைச் சமாதானப் படுத்தினார்.
நாங்கள் சிறையிலிருப்பது தெரிந்து பல பட அதிபர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலர் எங்களைக் காண வந்தனர். வந்தவர்கள் கூடை கூடையாகப் பழங்கள் வாங்கி வந்தனர். எல்லாவற்றையும் சிறைக் கைதிகளுக்கு பகிர்ந்து கொடுத்தோம்.பெரும்பாலான கைதிகளுக்கு நாங்கள் யாரென்றே தெரியவில்லை. அவர்கள் அனைவரும், தியாகராஜ பாகவதரும, என்.எஸ்.கிருஷணனும் சிறைச் சாலையில் இருந்த காலத்தில் உள்ளே வந்த ஆயுள் கைதிகள்.
பிரதமர் நேருவுக்கெதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அன்றிரவு பத்து மணியளவில் அண்ணாவையும் மற்ற பிரமுகர்கள் பலரையும் போலீஸ் விடுதலை செய்தது. அடுத்த நான் காலையில் என்னையும் எம்.ஜி்ஆரையைம் விடுதலை செய்தனர். அன்றைய தினம் பகல் உணவை எங்கள் குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டுத்தான் ராயப்பேட்டையில் உள்ள வீட்டுக்குப் போனார் அண்ணன். சிறையில் அவருடன் இருந்த அந்த வித்தியாசமான அனுபவம் என்னால் மறக்க முடியாத ஒன்று...
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva