நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பொங்கல் தொகுப்பாக அரிசி அட்டை பெறும் குடும்பத் தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. பச்சரிசி, சக்கரை மற்றும் கரும்பு ஆகியவை இன்று முதல் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 2.20 கோடி அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் உள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று முடிந்தது.
ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கும் டோக்கனில் எப்போது பொருள் வாங்க வேண்டும் என்று நேரம், தேதி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த தேதியில் சென்று பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகள், மாதத்திற்கு இரண்டு வெள்ளிக்கிழமைகளும், இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.