Category:
Created:
Updated:
அமெரிக்கா - தெற்கு புளோரிடா விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜெட் ப்ளூ விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியிலிருந்து அடையாளம் தெரியாத இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த விமானம் நியூயோர்க்கில் உள்ள ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, தெற்கு புளோரிடா விமான நிலையத்தை வந்தடைந்தது.
குறித்த விமானத்தில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பு நடவடிக்கையின் போது இந்த இரு சடலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
000