சினிமா செய்திகள்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
Ads
 ·   ·  2869 news
  •  ·  1 friends
  • 2 followers

பெரும் மோசடிகளை மறைக்கும் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றச்சாட்டு

க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் என்று குறிப்பிட்டுக் பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது எனவும், முறைமை மாற்றத்தில் மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் (Kabir Hashim) தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மீதான விவாதம் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் முறைமை மாற்றம் பிரதான பேசுபொருளாக காணப்பட்டது.

அனைத்து அரசியல் கட்சிகளும் முறைமை மாற்றம் பற்றி பேசின. சிறந்த மாற்றத்தை தேசிய மக்கள் சக்திளால் ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொண்டு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

வாழ்க்கைச் செலவு குறைப்பு, நாணய நிதியத்துடனான செயற்திட்ட மறுசீரமைப்பு, ஊழல் மோசடி, சிறந்த அரச நிர்வாகம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்த 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதா என்பதை ஆராய வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்தது.

எரிபொருள், பருப்பு, அரிசி, உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பகுதியளவில் குறைக்கப்பட்டன. மேலும், மக்களின் வாழ்க்கைச் செலவுகளும் குறைக்கப்பட்டன.

அநுரகுமாரவின் 100 நாள் நிர்வாகத்தில் அரிசி, தேங்காய், ஆகிய உணவு பொருட்களின் விலைகள் அமெரிக்க டொலருக்கு நிகரானதாக காணப்படுகிறது.

எதிர்க்கட்சி பதவிக்கான பொறுப்பை நாங்கள் சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளோம். கோட்டபய ராசபக்சவின் அரசாங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும் போது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பல முறை எடுத்துரைத்தோம்.

வங்குரோத்து நிலைமையை தடுக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு வலியுறுத்தினோம் .இருப்பினும் அரசாங்கம் எமது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை. இறுதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்தது” என்றார்

  • 634
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads