இவ்வாண்டு இலங்கைக்கு வருகைதரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்த ஆண்டு இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இந்த விஜயத்திற்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைத்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்துக்கான திகதியைத் தீர்மானிக்கும் பணிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது விடுத்த அழைப்பிற்கிணங்க, பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.
முன்னதாக 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2 சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
00