நாகதேவன் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திலுள்ள நாகதேவன் இறங்குதுறைமுகம் மிக மோசமாக சேதமடைந்து வருவதால் கடற்றொழிலுக்கு சென்று வருவதில் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்றொழில் கிராமங்களில் ஒன்றான பூநகரி நாகதேவன் துறையிலுள்ள இறங்குதுறையானது கடந்த 1993 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமாக முற்றுமுழுதாக சேதமடைந்து இன்று வரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது.
இறங்குதுறை இவ்வாறு காணப்படுவதனால் கடற்றொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கடற்கரைக்கு செல்லும் பாதையானது மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதுடன் துவிச்சக்கர வண்டிகளில் அல்லது வேறு எந்த வாகனங்களிலோ செல்ல முடியாத நிலை காணப்படுவதுடன் கடற்கரையில் உபகரணங்களை பாதுகாப்பதிலும் பெரும் இடர்களை எதிர்கொள்வதாக சுட்டிகாட்டியுள்ளனர்.
இதேவேளை நாளாந்தம் கடற்றொழிலுக்கு சென்று வருவதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் நாளாந்தம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். ஆகவே இறங்குதுறையை விரைவில் புனரமைத்து தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00