-
R
- 4 friends
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் 185 மில்லியன் ரூபா செலவில் நெல் மற்றும் தாணியங்களை களஞ்சியப் படுத்தக் கூடிய வகையில் தானியக் களஞ்சியசாலை
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் நீண்டகால தேவையொன்று உணரப்பட்டதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு நிதி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் சுமார் 185 மில்லியன் ரூபா செலவில் ஏறத்தாள நான்காயிரம் மெற்றிக் தொண் நெல் மற்றும் தாணியங்களை களஞ்சியப் படுத்தக் கூடிய வகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தானியக் களஞ்சியசாலை ஒன்று கிளிநொச்சி கனகாம்பிகைக் குளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையில் விவசாய மாவட்டங்களில் ஒன்றாக காணப்படுகின்ற இந்த வாழும் மக்களில் எழுபது வீதமானவர்கள் விவசாயத்தை வாழ்வாதாரத் தொழிலாக கொண்டு வாழ்பவர்கள் என்பதுடன் பெரும் போகத்தில் ஏறத்தாள எழுபதாயிரம் ஏக்கரிலும் சிறு போகத்தில் ஏறத்தாள இருபத்தையாயிரம் முதல் முப்பதாயிரம் ஏக்கரிலும் நெல் பயிரிடப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் ஒவ்வொரு அறுவடை காலத்திலும்; நெல்லுக்கான சந்தை வாய்ப்பின்மை காரணமாக விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அதே சமயம் நட்டத்தினையும் எதிர்கொள்ளும் நிலைமை காணப்படுவதுடன் அடுத்த போகத்துக்கும் தயார் படுத்த வேண்டிய நிதி தேவை இருப்பதினால் அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை குறைந்த விலைகளில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
இவ்வாறான விவசாயிகளின் தேவையை கருதியே மேற்படி மாவட்ட உணவுக் களஞ்சியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் சேவைகள் தொடர்பில் அல்லது இது பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடம் சென்றடையவில்லை குறிப்பிட்ட சில விவசாயிகள் தொடர்சியாக தாங்கள் அறுவடை செய்கின்ற நெல்லை களஞ்சியப்படுத்துவதன் மூலம் உரிய சந்தை வாய்ப்பை பெறுவதுடன் அதிக நன்மையடைவதாகவே குறிப்பிட்டுள்ளனர்.
விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை இயந்திரம் மூலம் உலர வைப்பதற்குரிய வசதிகளும் அதைவிட சூரிய ஒளியின் மூலம் உலர விடுவதற்கான நெற்தள வசதிகளும் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் நெல்லை உலர்த்தி பதர் நீக்கி தூய்மைப்படுத்தி பொதிகளாக்கி எடையிடப்பட்டு ஒவ்வொரு விவசாயிகளும் தனித்தனியாக களஞ்சிய படுத்தி வைக்கக்கூடிய வசதிகள் காணப்படுவதுடன் இவ்வாறு களஞ்சியப்படுத்தும் விவசாயிகள் தங்களுடைய தேவைக்குரிய நிதியை வங்கி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
மாவட்ட அரச அதிபர் குறிப்பிடுகையில் சிறுபோக அறுவடை செய்யும் விவசாயிகள் தமது நெல்லை மாவட்ட நெற்களஞ்சிய சாலையில் களஞ்சியப்படுத்தி உரிய முறையில் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன; எனவே அதனை பயன்படுத்தி விவசாயிகள் உரிய சந்தை வாய்புக்கள் கிடைக்கும் போது விற்பனை செய்ய கூடியதாக இருக்கும்.கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோகத்தில் அறுவடை செய்யும் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் நெல் சந்தைப்படுத்தும் சபையுடாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
அதற்கிடைப்பட்ட காலங்களில் நெல்லை அறுவடை செய்துள்ள விவசாயிகள் அதற்கான சந்தை வாய்ப்பு குறைவாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவற்றை எமது மாவட்டத்தில் உள்ள மேற்படி நெற்களஞ்சிய சாலையில் களஞ்சியப்படுத்தி அவற்றை உரிய முறையில் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மாவட்டத்திலேயே தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமையும் குறிபிபிடத்தக்கது.
இதே நேரம் மேற்படி உணவுக் களஞ்சிய சாலையில் அதிக விவசாயிகள் களஞ்சியப் படுத்த முன் வரும் போது பல்வேறு தேவைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. குறிப்பாக நெல்லை உலர்த்துவதற்கான மேலதிக இயந்திர மற்றும் தள வசதிகள் கூலியாட்களின் தொகை என்பன அதிகரிக்கப்படவேண்டியதும் அவசியமகும்.
(சுப்பிரமணியம் பாஸ்கரன்)
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·