கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு முன்னெடுக்கப்பட உள்ள சிறுபோக நெற்செய்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக காணப்படுகிறது சிறுபோக விவசாய செய்கைகளை பாதுகாப்பதற்கு கால்நடை வளர்ப்போர் தங்களத கால் நடைகளை உரிய வகையில் பராமரிக்க வேண்டும்.
அரசின் புதிய கொள்கைகளுக்கு அமைவாக விவசாய நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பங்களையும் சேதன முறைகளையும் பயன்படுத்தி உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்.
மாவட்டத்தின் நெல்லுற்பத்தியானது ஒரு கெக்ரேயருக்கு 03 தொடக்கம் 03.5 மெற்றிக் தொன்னாக கானப்படுகின்றது இதனை எதிர் காலத்தில் 04 தொடக்கம் 04.5 மெற்றிக் தொன்னாக அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்டத்தின் உணவு உற்பத்தியை அதிகரிக்கப்படவேண்டும் இதற்கு அனைவரது ஒத்துழைப்புக்களும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்ட அவர்தொடர்ந்து குறிப்பிடுகையில் மாவட்டத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறான சட்டவிரவாத் செயல்பாடுகள் தொடர்பில் தனக்கு நேரடியாகவே அந்த தகவல்களை தெரியப்படுத்துவது மிகவும் உதவியாக இருக்கும். தொடர்ந்தும் எதிர்காலத்தில் இதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எங்களைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
- 938