·   ·  24 posts
  • R

    3 members
  • 4 friends

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதும் இன்றும் வெடிபொருள் பாதிப்புக்கள் இன்றும் மீள் குடியேற்றப்பகுதிகளில் காணப்படுகிறன

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று ஆண்டுகள் கடந்துள்ள  போதும் இன்றும் வெடிபொருட்கள் ஒரு சவாலான விடயமாகவே காணப்படுகின்றது அதாவது இதன் பாதிப்புக்கள் இன்றும் மீள் குடியேற்றப்பகுதிகளில் கானப்படுகிறன.

ஆண் யில் கூட கிளாலிப்பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் வெடிப்புச் சம்பவம் ஒன்றில் காயமடைந்தமை குறிப்பிடத்தக்து.இலங்கையின் உள்நாட்டுப் போரில் பயன்படுத்தப்பட்ட இந்த வெடி பொருட்களை அகற்றும் பணிகள் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் இவ்வாறான ஆபத்துக்கள் காணப்படுகினன்றன.

நீண்ட கால யுத்தம் இடம் பெற்று 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதான் பின்னர் எட்டு வருடங்களுக்குப் பின்னர் 2017ம் ஆண்டு கண்ணிவெடிகளை தடைசெய்யும் சமவாயத்தில் 163 வது நாடாக இலங்கை இணைந்து கொண்டது.நடந்து முடிந்த போரில் இரு தரப்பினராலும் புதைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை பல சர்வதேச உதவி நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு ஏறத்தாள ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பாரிய பொறுப்பை இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொறுப்பேற்று முன்னெடுத்து வருகின்றன.

தொடர்ந்த உள்நாட்டுப் போரில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமாணங்கள் இழந்த நிலையில் வாழ்வதற்கு வழி தெரியாது பரிதவித்த பலரையும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பெண் தமைத்தவக் குடும்பங்கள் பணியாளர்களாக இணைத்துக்கொண்டு அவர்களுக்கான தொழில்வாய்ப்பை வழங்கி இந்த பாரிய பொறுப்பை மேற்படி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொறுப்பேற்று முன்னெடுத்து வருகின்றன.

இலங்கையின் வடக்கில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஒரு முன்னிலை நிறுவனங்களில் ஒன்றாக ஸார்ப் என்ற தன்னார்வ கண்ணிவெடியகற்றும் நிறுவனம் காணப்படுகின்றது. ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளின் நிதியுதவியுடன் மனிதாபிமானப்பணிகளில் ஈடுபட்டு வரும் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற இந்த நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும்; கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவு ஆகிய பகுதிகளில் இந்த வெடி பொருள் அகற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

கடந்த மே மாதம் வரையும் இருபது இலட்சத்து எண்பத்திரெண்டாயிரத்து நாற்றுபத்து சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து முப்பத்திமூவாயிரத்து அறுநூற்று எழுபது அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதுடன் தொடர்ந்தும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.இதனை விட வைத்திய சாலைகளுக்கான குருதிக் கொடை பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் சிரமதான பணிகள் எனப்பல்வேறு பட்ட பணிகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆபத்து மிக்க இந்த பணிகளில் பெண்கள் பலர் துணிச்சலுடன் ஈடுபட்டு வருகின்றார்கள் குறித்த கண்ணிவெடி அகற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணியாளராக இணைந்து பணியாற்றி வரும் பெண் தலைமை தாங்கும் குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமார் வனிதாமணி (வயது 32) என்பவருடன் இதுபற்றி உரையாடியபோது தான்; பெரிய பரந்தன் பிரதேசத்தில் வசித்து வரும் ஒரு பெண் தலைமைத்துவ குடும்பம் எனது கணவர் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக உயிரிழந்தன் பின்னர் என்னுடைய குடும்பப் பொறுப்பை நானே முழுமையாக பொறுப்பேற்று செயற்பட்டு வருகின்றேன்.

கடந்த காலங்களில் வருமானங்கள் இன்றி யுத்தத்திற்குப் பின்  நான் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து கொண்டு இருந்தேன். ஆனால் இந்த கண்ணிவெடி அகற்றும் பணிக்காக இணைந்து இந்த தொழில் ஆபத்தான ஒரு தொழில் என்பதால் பலர் இந்த தொழிலை விரும்பாத நிலையிலும் நான் ஒரு பெண்ணாக இந்த பணிக்காக என்னை இணைத்துக் கொண்டு இருந்தேன் காரணம் மற்றவர்களிடம் கையேந்தி வாழக்கூடாது என்னுடைய உழைப்பில் நானே வாழ வேண்டும் என்ற ஒரு வைராக்கியத்துடன் இணைந்து கொண்டேன்.

இப்போது என்னுடைய தாயையும் எனது சகோதரியின் ஒரு குழந்தை என்னுடைய குழந்தை ஆகியோரை பரமரித்து வருகினன்றேன்.  இதற்கு இந்த நிறுவனம் எனக்கு கை கொடுத்து இருக்கின்றது. அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து நான் இதுவரை காலமும் என்னுடைய வாழ்க்கையை நடத்தி இருக்கின்றேன்.  எதிர்காலத்தில் இந்த பணி நிறைவு பெற்றாலும் எனக்கு ஒரு வாழ்வாதார உதவி கிடைத்து நான் ஒரு நிலையான ஒரு வாழ்வாதாரத்தை பெற்றவராக இருப்பேன் என்ற நம்பிக்கையையும் உள்ளது.

அதாவது தினமும் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்துவிட்டு பாடசாலை செல்லும் இரண்டு பிள்ளைகளுக்கும் சகல ஏற்பாடுகளையும் செய்து நாலு முப்பது மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு என்னுடைய பணி இடத்துக்குச் சென்று அங்கே பணியைச் செய்வேன் அதன் பின்னர் வீடு திரும்பி மீண்டும் வீட்டு வேலைகளை கவனிப்பதும் மறுநாள் இப்படி செல்வதுமாக இருக்கும் ஆனால் இந்த தொழில் என்பது மிகவும் ஒரு ஆபத்தான தொழில் இதை பலர் விரும்பாத தொழிலாக இருக்கலாம் ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் எங்களுடைய மக்களுக்கான மீள்குடியேற்றம் விவசாய நடவடிக்கைகள் உட்கட்டுமான வசதிகளை மேற்கொள்ள கூடிய வகையிலே இந்த பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதே போன்று இந்தப்பணியில் ஈடுபட்டு வரும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட இளம்; தாய் ஒருவரை சந்தித்து இது தொடர்பிலேயே உரையாடிய போது எனக்கு இரண்டு பிள்ளைகள் இரண்டு பிள்ளைகளும் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார் ஆனால் கூலி வேலை எல்லா நேரமும் கிடைக்காது கிடைக்கின்ற சந்தர்ப்பத்திலே வேலைகள் கிடைக்கும் ஏனைய நாட்களில் நாங்கள் எந்தவிதமான வருமானமும் இருக்காது.  ஆனால் ஒரு நிரந்தரமான வருமானம் இல்லை ஒரு வருமானத்தை தேட வேண்டிய ஒரு தேவை இருந்தது அந்த அடிப்படையிலேயே இந்த கண்ணிவெடி அகற்றும்; பணிகளில் நினைத்துக்கொண்டிருந்தேன்.  இந்த கண்ணிவெடி அகற்றும் பணியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பணி செய்து வருகின்றேன் இது உண்மையாகவே ஒரு ஆபத்தான தொழில் என்றாலும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக முன்னெடுக்கப்படுகின்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு பலருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குகின்ற ஒரு பணியையும் அதோடு மீள்குடியேற்றம் உட்கட்டுமானம் விவசாய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான ஒரு மனிதாபிமான நடவடிக்கையான இந்த கண்ணி வெடி அகற்றும் பணியில் குறித்த ஷஸார்ப் நிறுவனம் முன்னெமுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (சுப்பிரமணியம் பாஸ்கரன்)

  • 311
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்