Ads

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் புயலும் இல்லத்தில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் பெற்றோருமான பஷீர் காக்கா ஏற்றி வைத்தார்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் புயலும் இல்லத்தில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் பெற்றோருமான பஷீர் காக்கா ஏற்றி வைத்தார்.

  • 1265
  • More
  • 569
  • More
  • 565
  • More
  • 572
  • More
  • 577
  • More
  • 574
  • More
  • 542
  • More
  • 545
  • More
  • 552
  • More
  • 564
  • More
  • 589
  • More
  • 581
  • More
  • 594
  • More
Comments (0)
Login or Join to comment.
ஸ்ரீ குரோதி வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி புதன்கிழமை 4.12.2024சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.இன்று பிற்பகல் 01.08 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று மாலை 05.40 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.ரோகிணி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். 
  • 76
  • 76
·
Added a news
அனைத்து கோழி ஏற்றுமதிகளையும் நிறுத்திவிட்டதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.நியூஸிலாந்தின் தென் தீவில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல், நோய்க்கிருமி மாறுபாடு கண்டறியப்பட்டதை அடுத்து கோழி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒரு கிராமப்புற கோழி பண்ணையில் ui7N6 துணை வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நியூசிலாந்து அரசாங்கம், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.இது உலகளவில், மனிதர்களில் பரவுவதற்கான அச்சத்தை எழுப்பிய ui7N6 விவகாரத்திலிருந்து வேறுபட்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.  
  • 128
  • 126
  • 126
·
Added a news
....தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.*தென்கொரிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அந்நாட்டில் அவசர நிலையை அறிவித்து ராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன
  • 225
·
Added a news
இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஜேவிபி MP ஆக இருந்தவேளையில் ஏன் இது ஒழிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினாரோ அதே காரணங்களைத் தான் நாமும் முன்பிருந்தும், இப்போதும் வலியுறுத்துகிறோம். ஈராண்டுகளுக்கு முதல் இந்தப் போராட்டத்துக்கு அழைத்தவர் இப்போது இடம்பெற்றுள்ள கைதுகள் பற்றி மௌனமாக இருக்கிறார்.கைதுகளுக்கான காரணங்கள் சட்டத்தில் உள்ள ஏனைய பிரிவுகள், ஊடக அறிக்கையில் காவற்துறை குறிப்பிட்டுள்ள குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்படட்டும்.ஆனால் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் இடம்பெறும் கைதுகள் ஆபத்தானவை. அதை நாம் காலாகாலமாக அனுபவித்து வந்திருக்கிறோம்.இதேவேளை 60 வயது நிரம்பிய அம்மா ஒருவர் திருகோணமலையில் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.60 வயதான அவர் பயங்கரவாததை எப்படி ஊக்குவித்திருப்பார் என்பதோ அல்லது அவர் சாட்சியாகத் தான் அழைக்கப்பட்டாரோ தெரியவில்லை.ஆனால், இந்தச் சட்டத்தை ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் எதேச்சாதிகாரத்தோடு பயன்படுத்தினார்கள் என்பதை அறிந்தே JVP யினர் ஆட்சிக்கு வரும்வரை அதை எதிர்த்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
  • 438
·
Added a news
ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்குவதற்கான தனது முந்தைய முடிவை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஅத்துடன் அவர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றதுவாகனங்களை வழங்குவது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கைகளுக்கு முரணாக இருக்கலாம் என்ற கவலையைத் தொடர்ந்து இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டது.இந்த நடவடிக்கை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது, அவர்களில் சிலர் ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை ஒதுக்கினால் இதே போன்ற சலுகைகளை கோருவோம் என்று எச்சரித்தனர்.எவ்வாறாயினும், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான உரிமையை தக்க வைத்துக் கொள்வார்கள்.இது தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை அரசாங்கம் இனி தொடராது என்று தெரிவிக்கப்பட்டுளதுஇந்த நன்மையை இலகுபடுத்துவதற்காக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழமையாக இருப்பினும் தமது அமைச்சு அவ்வாறான பிரேரணையை முன்னெடுக்காது என அமைச்சர் விஜேபால விளக்கமளித்துள்ளார். மேலும், அமைச்சர்களுக்கான புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மாறாக, தற்போது அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அமைச்சுகள் பயன்படுத்தும் V8 வாகனங்களை ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது.இதேவேளை "செலவு குறைந்த, எரிபொருள் சிக்கனமான மற்றும் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் வாகனங்களை கொள்வனவு செய்வதனை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்" என்று அமைச்சர் விஜேபால கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது000 
  • 439
·
Added a news
 உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG), 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் (SP), 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் (ASP) இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅந்த வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ். முத்துமால குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேற்படி பதவியிலிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ். தெஹிதெனிய, நுகேகொடை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.000
  • 444
·
Added a news
2024 (2025) கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் கால எல்லை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.2024 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் 2024 நவம்பர் 05 முதல் நவம்பர் 30 வரை கோரப்பட்டிருந்தது.இது தொடர்பில் 1911 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற முடியும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது000
  • 445
·
Added a news
மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.ஆட்சிப்பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"தற்போதைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு என்பது, இதுவரை காலமும் கௌரவமான அரசியல் உரிமைகளை இந்த நாட்டிலே பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கு கிடைத்துள்ள சிறிதளவான பரிகாரமாகவே நோக்கப்படுகின்றது.மாகாணசபை முறைமையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலமே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கான தீர்வை காண முடியும் என்பதை ஈ.பி.டிபி. கட்சியினாராகி நாமும் கடந்த 35 வருடங்ளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோம்.கடந்த காலங்களில் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளையும் நாம் மேற்கொணாடிருந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குறிப்பாக 2010 - 2015 காலப் பகுதியிலும் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அப்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருந்த நிலையில், அரசாங்கத்தின் அங்கமாக நாம் இருந்தபோதிலும், ஆளும் தரப்பில் அப்போதிருந்த தென்னிலங்கையை சேர்ந்த முற்போக்காளர்களான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து எமது ஆட்சேபனையை வெளிப்படுத்திய நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.அண்மையில் சிநேகிதபூர்வமாக உங்களை சந்தித்த வேளையிலும், 13 ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும், அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமான பொறிமுறையாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம். அத்துடன், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்களின் கணிசமான ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்கின்ற நிலையில், அவர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிந்திப்பதற்கு முன்னர் தற்போதைய அரசியலமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.ஆக, உங்களுக்கு இருக்கும் தார்மீக கடப்பாட்டின் அடிப்படையிலும், தேர்தல் காலத்தில் எமது மக்களுக்கு நீங்கள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலும், 13 ஆம் திருத்தச் சட்டத்தினை தொடர்ந்தும் பாதுகாப்பதோடு மாகாணசபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • 449
·
Added a news
பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான பிரான்ஸ் அரசாங்கம் இந்த வார இறுதியில் பதவி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. பிரான்ஸ் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில், அங்கு அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், மைக்கேல் பார்னியர் தமக்கான சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இதனையடுத்து, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்படுமாயின் 1962 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் வெளியேற்றப்பட்ட முதல் பிரான்ஸ் அரசாங்கமாக இது கருதப்படும்.000
  • 452
·
Added a news
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விசேட வேலைத்திட்டமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.  பிரதான மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகள் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. காலாவதியான மற்றும் தகவல்கள் மாற்றப்பட்ட பொருட்கள் சந்தையில் விநியோகிக்கப்படுதல் மற்றும் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகளைத் தவிர்ப்பதனை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு மேலதிகமாக ஆடைகள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துமாறு விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.000
  • 454
·
Added a news
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளைமுதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27ஆம் திகதிமுதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.அதன்படி நாளை முதல் மீண்டும் பரீட்சை ஆரம்பிக்கப்படும் எனவும், நாளைய தினம் இடம்பெறவுள்ள பாடங்களின் படி பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.பரீட்சை நடைபெறாத நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
  • 458
·
Added a news
அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே குறிப்பிட்டுள்ளார்.அண்மைக்காலமாக சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.சில இடங்களில் தேங்காய் ஒன்று 220 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.தென்னை ஏற்றுமதி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சுமார் 100 கோடி தேங்காய் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.இந்தநிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 000
  • 456
·
Added a news
மழையுடனான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.அதனால், மின் உற்பத்தி நிலையங்கள் அதிக கொள்ளளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, நேற்று முன்தினம் (01) நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 62.2% நீர் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் 35% முதல் 40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க குறிப்பிட்டுள்ளார்.000
  • 459
·
Added a news
பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல் ராஜபக்‌சவை முன்னிறுத்துவதற்கான செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.அதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்‌சவே வழிநடத்துவார் என்று அறியமுடிகின்றது.ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுண கட்சியின் சார்பில் போட்டியிட்ட நாமல் 342,781 வாக்குகளைப் பெற்று வெறும் இரண்டரை வீத வாக்குகளுடன் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.எனினும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவை நாமல் ராஜபக்‌சவே வழிநடத்தினார்.குறித்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி பெற்ற வாக்குகளை விட சற்று கூடுதலாக 350,429 வாக்குகள் பெற்றுக் கொண்டிருந்தது. மொத்த வாக்கு வீதத்தில் அது 3.14 வீதமாகும். அதன் பிரகாரம் வாக்கு சதவீதத்திலும் அக்கட்சி சற்று முன்னேற்றம் கண்டிருந்தது.அத்துடன் தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.இந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்‌சவே வழிநடத்துவார் எனவும், இரண்டாம் தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கான ஒத்திகை களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் பயன்படுத்தப்படவுள்ளது எனவும் பொதுஜன பெரமுண கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன் மூலமாக வெகுவிரைவில் பொதுஜன பெரமுண கட்சியின் தலைவராக நாமல் ராஜபக்‌சவை முன்னிறுத்துவதற்கான களத்தை உருவாக்கும் செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது
  • 460
·
Added a news
வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையினால் வடக்கின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரில் எலியின் சிறுநீர் கலந்து பக்ரீறியா தொற்று ஏற்பட்டு குறித்த நோய் ஏற்படுகிறது.இந்நிலையில், கடுமையான காய்ச்சல் மற்றும் கண்சிவப்பு போன்ற அறிகுறி காணப்பட்டால் மருத்துவ உதவியைப்பெற்று எலிக்காய்ச்சலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.000
  • 460
·
Added a news
ஊனமோ, அங்கவீனமோ ஒரு குறை அல்ல. உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தின் அடிப்படையில் பல தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன.அந்த வகையில் இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.இது உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கான மேன்மை மற்றும் உரிமைகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்டது.1981 ஆம் ஆண்டு இந் நாள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதியை பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அன்றிலிருந்து இத் தினம் அவர்களுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது.உலகளவில் 15 சதவீத மக்கள் ஏதாவது ஒரு வகையில் இயலாமையை அனுபவிக்கின்றனர். இதில் 80 வீதமானவர்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர்.மாற்றுத் திறனாளிகளுள் பார்வைக் குறைபாடு உடையோர், கை, கால் குறைபாடு உடையோர், செவித்திறன் குறைந்தோர் மற்றும் பேச இயலாதவர், மனவளர்ச்சி குன்றியவர் மற்றும் தொழுநோய் பாதித்தவர் மற்றும் குணமடைந்தவர் என்று ஐந்து வகையினர் உள்ளனர்.இவ்வுலகில் மானிடராகப் பிறப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமானது. அவ் மானிடப் பிறப்பில் ஊனமோ, அங்கவீனமோ ஒரு குறை அல்ல. ஊனம் மற்றும் அங்கவீனம் என்பது அவரவர் மனதில்தான் உள்ளதே தவிர உடம்பில் இல்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.இவ்வுலகில் எத்தனையோ மாற்றுத் திறனாளிகள் தம் உடலில் உள்ள அக் குறையை நிறைவாக்கி வாழ்வில் உச்சத்தை அடைந்துள்ளனர். அவ்வாறு சாதித்தவர்களில் ஒரு சில உதாரணங்கள் இதோ....எல்பர்ட் ஐன்ஸ்டின்இவர் உலகப் புகழ்பெற்ற கணித மேதை மற்றும் இயற்பியலாளர். மூன்று வயது வரையில் பேச முடியாமல் இருந்தார். வளர்ந்த பின்னரும் கூட இவருக்கு பேசுவது சிரமமாகத்தான் இருந்தது. குறிப்பிட்ட காலம் வரையில் தான் இருப்பார் என்று மருத்துவர்கள் கூறியதையும் தாண்டி வாழ்ந்து சாதித்துக் காட்டியவர். இன்று வரையில் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.ஹெலன் கெல்லர்சிறுவயதில் ஏற்பட்ட மர்மக் காய்ச்சலினால் பார்க்கும் திறன், பேச்சு, கேட்கும் திறன் உள்ளிட்ட அனைத்தையும் இழந்தார். பின்னர் சைகை மொழியைக் கற்றுக்கொண்டு பிறருடன் தொடர்புகொள்ளத் தொடங்கியுள்ளார்.பேச்சு மற்றும் செவித் திறனை இழந்தவர்களுள் முதன் தலில் இளங்கலை பட்டம் பெற்றவர் இவர்.நாற்பது நாடுகளுக்கு பயணம் செய்து இவரைப் போன்று மாற்றுத்திறன் கொண்ட பலருக்கு சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.இவர் மாற்றுத் திறன் கொண்ட மக்களுக்கான போராளியாகவும் கருதப்பட்டார்.இவரின் பிறந்த தினமான ஜூன் 27 ஆம் திகதி அமெரிக்காவின் ஹெலன் கெல்லர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.மர்லா ருன்யான்அமெரிக்காவைச் சேர்ந்த இத் தடகள வீராங்களை பார்வையற்றவர். இவர், மாற்றுத் திறனாளிகளுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் மூன்று தடவைகள் உலக செம்பியன் பட்டம் பெற்றார்.மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்படும் பாராலிம்பிக் போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்றார்.இவ்வாறு பல பேரின் பெயர்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். அதிலும் வெளியுலகத்துக்கு தெரியாமல் எத்தனையோ மாற்றுத் திறனாளிகள் சொந்த முயற்சி மற்றும் உழைப்பினால் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த டிஜிட்டல் யுகத்தில் மனிதனின் எல்லா பிரச்சினைக்கும் ஒரு முடிவு கிடை்க்கிறது. அதாவது பார்வைக் குறைபாடுடன் இருப்பவர்களுக்கு அவர்கள் படிக்கும் விதத்திலான புதுப்புது செயல்பாடுகள் வந்துவிட்டன.அதேபோல் அனைத்துக்குமே ஒரு மாற்று வழி கிடைத்துவிட்டது. அவர்களும் சாதாரண மனிதர்கள் போல் வாழ ஆரம்பித்துவிட்டார்கள்.ஆனால், இதை புரிந்துகொள்ள முடியாத ஒரு சிலர் இன்னமும் அவர்களை இயலாதவர்களாகவும் திக்கற்றவர்களாகவும் நோக்குகிறது.சில வேளைகளில் சமூகத்தின் இவ்வாறான பார்வைகள் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களது திடத்தை உடைக்கலாம்.எனவே இவ்வாறான சிந்தனை கொண்ட மனிதர்கள் ஒரு விடயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் நம்மை விடவும் திறமையானவர்கள் மனதால் வலிமையானவர்கள் என்று.எனவே இந்த நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும் விதத்தில் அவர்களுக்கு ஒன்றித்து நாமும் பயணிப்போம்.000
  • 462
·
Added a news
குடிபோதையில் வந்த குறித்த நபர் வீட்டில் உள்ள பெண்களை அடிக்கவும் வந்துள்ளார் காணொளி ஆதாரம் முதல் Comment இல் இவரின் புகைப்படம்.....குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் வாட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது, அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த முறை நடந்த பாராளுமன்ற வேட்ப்பாளர் ஆவார்....இவரின் செல்வாக்கு போலீசில் எடுபடுமா அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்குமா?
  • 530
·
Added a news
குடிபோதையில் வந்த குறித்த நபர் வீட்டில் உள்ள பெண்களை அடிக்கவும் வந்துள்ளார் காணொளி ஆதாரம் முதல் Comment இல் இவரின் புகைப்படம்.....குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் வாட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது, அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த முறை நடந்த பாராளுமன்ற வேட்ப்பாளர் ஆவார்....இவரின் செல்வாக்கு போலீசில் எடுபடுமா அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்குமா?
  • 531
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, கார்த்திகை மாதம் 18ஆம் தேதி  மேஷம் -ராசி: பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தேடல்கள் உருவாகும். ஓய்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை ரிஷபம் ராசி: சகோதரர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். செலவுகளால் கையிருப்புகள் குறையும். எண்ணிய பணிகளில் சில மாற்றம் ஏற்படும். மறைமுகமான விமர்சனம் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மிதுனம் -ராசி: இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். ஆரோக்கியம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். தடைப்பட்டு வந்த ஒப்பந்தப் பணிகள் சாதகமாகும். நலம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு  கடகம் -ராசி: உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். வியாபார பணிகளில் மந்தமான போக்குகள் காணப்படும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பலம் மற்றும் பலவீனங்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் சிம்மம் -ராசி:வர்த்தக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிப்படையான குணங்கள் மூலம் பலரின் அறிமுகங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு கன்னி -ராசி: நினைத்த சில காரியங்களில் அலைச்சல் ஏற்படும். தாயாருடன் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பணி நிமித்தமான இழுபறியான சில வேலைகள் முடியும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். வீட்டில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். அறிமுகம் கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதா துலாம் -ராசி: சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு விருச்சிகம்- ராசி: வியாபார பணிகளில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மூலமாக மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை தனுசு -ராசி: தற்பெருமை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். சில செயல்களில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். கற்றல் திறனில் சில மாற்றம் ஏற்படும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றங்கள் உருவாகும். விலையுயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பு உருவாகும். முயற்சி மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மகரம் -ராசி:வித்தியாசமான பொருட்கள் மீதான ஆர்வத்தினால் விரயங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பும் முன்னேற்றமும் காணப்படும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கும்பம் –ராசி:கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்கால சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபங்கள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். இணையத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள் . அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மீனம் -ராசி: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைப்பட்ட சில வேலைகள் நிறைவு பெறும். விலகி சென்றவர்கள் சாதகமாக இருப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்ப்பு மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஊதா  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 566
ஸ்ரீ குரோதி வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி செவ்வாய் கிழமை 3.12.2024சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.இன்று பிற்பகல் 01.21 வரை துவிதியை. பின்னர் திரிதியை. இன்று மாலை 05.23 வரை மூலம். பின்னர் பூராடம். கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 574
  • 580
  • 579
·
Added a post
ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார். போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய். சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன். இப்படியாக அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார். இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்.. அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது "அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன். அப்பொழுது தானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும். சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள், என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். சொல்லி முடித்தவுடன் மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது.அவ்வளவுதான்.. அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம் எவன் இதில் ஜெயிக்கிறான்னு? நிச்சயமா எவனாலும், முடியாது என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்.அப்பொழுது திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம் அத்தனை பேரும் மூச்சுக்கூட விட மறந்து உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்.அந்த இளைஞன்.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறிவெடவெடவென நின்றான்.பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை. "பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்". அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. வாய் தந்தியடித்தது, மிரட்சியில்கண்கள் அரண்டு போய் இருந்தது. பின், ஒருவித வெறியுடன் "அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்.." என்றான்.1 :முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று, உனக்கே தெரியாது.. (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான் என்பதும் புரியவரும்.)2 :உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள் உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே.. (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே..)3 :சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான், நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும்.4 :சிலருக்கு.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது. (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும், பெற்றோரை நம்புங்கள்..)
  • 716
·
Added a news
தென்கொரியா என்றாலே அதன் அதிநவீன தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது தென் கொரியா இதுவரை இல்லாத வகையில் கருவுறுதல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.. அங்கு மக்கள் தொகை படுவேகமாக சரியும் நிலையில், அதைச் சரி செய்ய முடியாமல் தென்கொரிய அரசு போராடி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தென்கொரியா என்ற நாடே இல்லாத சூழல் கூட உருவாகும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த நூற்றாண்டில் இந்தியா, சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மக்கள்தொகை வளர்ச்சி தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.ஆனால், இந்த நூற்றாண்டில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மக்கள்தொகை சரிவு உலகின் பல நாடுகளுக்குப் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக தென்கொரியா இருக்கிறது. இந்த ஆபத்தை உணர்ந்து தான் தென்கொரிய அரசு மக்கள்தொகையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகம் குழந்தை பெறுவோருக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   அங்கு ஆண்கள் கட்டாயமாக ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், 30 வயதுக்குள் 3 குழந்தைகளுக்குத் தந்தையானால் கட்டாய ராணுவ பயிற்சியில் இருந்து கூட விலக்கு தருவது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. என்னதான் இவ்வளவு சலுகைகளைக் கொரியா வாரி வழங்கினாலும், அங்குள்ள அடுத்த தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதில் சுத்தமாக ஆர்வம் காட்டுவது இல்லையாம். குழந்தை பெற்றெடுத்தால் தங்கள் கேரியர் பாதிக்கப்படும் என்று இளம்பெண்கள் பலரும் கருதுகிறார்கள். அதேபோல குழந்தை வளர்க்க ஆகும் செலவும் பெரிய சிக்கலாக இருக்கிறது. இது போன்ற பிரச்சினைகளால் தென்கொரிய நிலைதடுமாறிப் போய் இருக்கிறது. இந்த சிக்கலைச் சரி செய்ய முடியாவிட்டால் தென்கொரிய அரசு நிச்சயம் அழிவையே சந்திக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
  • 731
·
Added a post
அமாவாசை அன்று குலதெய்வத்தை நம் வீட்டிற்குள் அழைத்து, இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில், கஷ்டங்களுக்கு ஒரு தீர்வானது விரைவில் கிடைக்கும். உங்களுடைய வீட்டிலும் தீராத குடும்ப கஷ்டம், பண கஷ்டம் கடன் சுமை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் அடுத்த அமாவாசைக்குள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தெரியும். மாலை பூஜையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வாசனையாக இருக்கும் சாம்பிராணி தூபம் ஏற்றி குலதெய்வத்தின் பெயரை 108 முறை சொல்லி வீட்டிற்குள், குல தெய்வத்தை அழைத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் நிற காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில், கல் உப்பு ஒரு கைப்பிடி, ஒரு ரூபாய் நாணயம், ஒரு துண்டு வசம்பு, இதோடு வீட்டில் இருக்கும் தங்க நகை மோதிரமுமோ, மூக்குத்தியோ சின்ன அளவில் எது இருந்தாலும் வைக்கலாம். தங்கம் இல்லை என்றால் அந்த தங்கம் இல்லாமல் மற்ற பொருட்களை எல்லாம் வைத்து மஞ்சள் நிற துணியை ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை பூஜை அறையில் வைத்து மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். கடன் தீர, அடமான நகை மீட்க அடமானத்தில் இருக்கும் சொத்துக்களை மீட்க, எந்த பிரச்சனை இருந்தாலும் அதை இறைவனிடம் முறையிடுங்கள். பிரார்த்தனை முடிந்தவுடன் இந்த முழுசை கொண்டு போய் நிலை வாசலில் மாட்டி விட வேண்டும். இந்த முடிச்சுக்கு உள்ளே நீங்கள் தங்கம் வைத்திருக்கிறீர்கள் என்றால், நிலை வாசலுக்கு உள்பக்கம் இருக்கக்கூடிய இடத்திலும் இந்த முடிச்சை மாட்டி வைக்கலாம் தவறு கிடையாது. அடுத்த அமாவாசை வரை இந்த முடிச்சு அப்படியே இருக்க வேண்டும். தினமும் விளக்கு ஏற்றும் போது, குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி ஊதுவத்தியை இந்த முடிச்சுக்கு காண்பிக்க வேண்டும். அடுத்த அமாவாசை வரும்போது உள்ளே இருக்கும் பொருட்களை எடுத்து மீண்டும் புதுப் பொருட்களை மாற்றி வைக்க வேண்டும். ஒவ்வொரு அமாவாசைக்கும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து முடிச்சை குலதெய்வத்தை நினைத்து நிலை வாசலில் கட்டி தொங்கவிடும் பட்சத்தில், உங்கள் வீட்டிற்குள் கடனோ கஷ்டமோ நுழைவதற்கு வாய்ப்பே கிடையாது.   இந்த முடிச்சில் குலதெய்வமானது தங்கி உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் என்பதுதான் இந்த பரிகாரத்தின் நம்பிக்கை. பல பேர் செய்து பலன் கண்ட பரிகாரம் இது. முழு நம்பிக்கையோடு இதை செய்தால் நிச்சயம் உங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உணருவீர்கள். ஒரு அமாவாசை அன்று செய்து பாருங்கள். அடுத்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரியும்.
  • 732