Feed Item

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் 29-03-2023 பாராம்பரிய முறைப்படி பிரம்பு வழங்கும் வைபவத்தை தொடர்ந்து  மாட்டு வண்டில்களில் பண்டமெடுத்து வருவதற்காக யாழ்; புத்தூர் பண்டமரவடிக்கு புறப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர் வரும் 05ம் திகதி புதன்கிழமை இரவு சிறப்பாக நடைபெற உள்ளது.ஆலயத்திற்கான பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று புதன் கிழமை (29-03-2023) பகல் கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பிரம்பு வழங்கும் நிகழ்வையடுத்து விளக்கு வைத்தல் வைபவத்துடன் யாழ்; மீசாலை புத்தூர் சந்தி பண்டமரவடியிலிருந்து பண்டமெடுப்பதற்கு மாட்டு வண்டிகளில் பக்தர்கள் இன்றைய தினம் புறப்பட்டுள்ளனர்.

  • 1959