Feed Item
Added a news 

கடந்த கால போக நெற்செய்கை மேற்கொண்ட சகல விவசாயிகளுக்கும் கெக்ரேயர் ஒன்றுக்கு 35 கிலோ கிராம்  USAID நிதியில் FAO.  உலக உணவு விவசாய நிறுவனம் மூலம் அடிக்கட்டு உரம் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்களம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால போக நெற்செய்கை மேற்கொண்ட சகல விவசாயிகளுக்கும் கெக்ரேயர் ஒன்றுக்கு 35 கிலோ கிராம்  USAID நிதியில் FAO.  உலக உணவு விவசாய நிறுவனம் மூலம் TSP (அடிக்கட்டு உரம்)   இலவசமாக இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருவதாக கமநல  அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா தேவரதன் தெரிவித்துள்ளார்.குறித்த இலவச உரவிநியோகமானது இன்று முதல் சகல கமநல சேவை நிலையங்கள் ஊடாகவும் கடந்த காலபோக செய்கை மேற்கொண்ட சகல விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார்கிளிநொச்சி விவசாயிகளுக்கு USAID நிதியில் FAO. உலக உணவு விவசாய நிறுவனம் மூலம் TSP (அடிக்கட்டு உரம்) வழங்கும் பணி மாவட்டத்தின் பூநகரி கமநல சேவை நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது. பூநகரி கமநலசேவை நிலையத்திற்குற்பட்ட சின்ன பல்லவராஜன் கட்டு கமக்காரர் அமைப்பைச்சேர்ந்த 350 விவசாயிகள் இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.  ஒரு ஹெக்டேயருக்கு நீர்ப்பாசன வயல்களுக்கு 33.கிலோ050கிராமும் மழையை நம்பி மானாவாரியாக செய்கை பண்ணும் வயல் நிலத்திற்கு 24கிலோ 700கிராமும் ஹெக்டேயர் வீதமும் வழங்கப்பட்டது.

  • 347