முல்லைத்தீவு திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய முன்றலில் திருமுருகண்டியான் பாதமலர் நூல் வெளியீட்டு விழா 31-08-2022 நடைபெற்றுள்ளது.
இளம் படைப்பாளி தி. தனுரதனின் திருமுருகண்டியான் பாதமலர் நுால் வெளியீட்டு விழா புதன் கிழமை (31-08-20222) பகல் 10:30 மணிக்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திரு இ.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது .
நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதேயன் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியினை வெளியிட்டு வைத்ததார். மேற்படி நிகழ்வில் ஒட்டு சுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நல்லை ஆதின சுவாமிகள் இந்து மா மன்றத்தினர் படைப்பாளிகள் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.