-
R
- 4 friends
வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தொழில்களில் பிரதானமான ஒன்றாகக் காணப்படும் விவசாயச்செய்கைக்கு தேவையான யுரியா மற்றும் கிருமிநாசினிகள் களை நாசினிகள் கிடைக்காமையால் விவசாயிகள் கடந்த மூன்று போகங்களிலும் நட்டத்தை எதிர் நோக்கியுள்ளனர்
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் மக்களில் அறுபது வீதத்திற்கு மேல் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர்.இவ்வாறு விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்கள் இன்றைய நிலையில் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர் நோக்கி வருகின்றனர்கடந்த காலங்களில் வறட்சிப்பாதிப்;பு, விளைபொருட்களை உரிய காலத்தில் உரிய விலைகளில் சந்தைப்படுத்த முடியாமல் இருந்தாலும் இவ்வாறானதொரு நெருக்கடிகளை எதிர் கொள்ளவில்லை.
ஏக்கர் ஒன்றுக்கு கடந்த போகங்களில் 35000 ரூபாமுதல் 40000 ரூபா வரை செலவிடப்பட்டது இப்போது எரிபொருள் விலையேற்றம் இரசாயன உரத்தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு கிருமி நாசினிகள் களை நாசினிகளுக்கான விலையேற்றம் என்பன காரணமாக ஒருஇலட்சத்து 55ஆயிரம் ரூபா முதல் ஒருஇலட்சத்து 62ஆயிரம் ரூபாவரை செலவிடவேண்டிய நிலைகாணப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் போகத்தின் போது நீர்ப்பாசனக்;காணிகள் மற்றும் மானாவாரி பயிர்ச்செய்கை நிலங்கள் என 59 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வருடாந்தம் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது.
கடந்த போகத்திலும் இவ்வாறாறே செய்கை மேற்கொள்ளப்பட்டது ஆனால் மேற்படி உற்பத்தியில் கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுத்தேவைக்குரிய 22 ஆயிரத்து 310 மெற்றிக்தொன் நெல்லைக் கூட உற்பத்தி செய்யமுடியவில்லையென விவசாயஅமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.பயிர்ச்செய்கையின் போது உரம் மருநதுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் பயிர்ச்செய்கைநிலப்பண்படுத்தல் விதைநெல்லை பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு கடந்த போகங்களை விட இப்போது பலமடங்கு அதிகரித் விலையேற்றம் காரணமாக பெருந்தொகை முதலீடுகளை செய்யவேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
இன்றைய நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களிலும் 27 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது அதேபோல 1600 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவுச் செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான சேதன உரத்தை முழுமையாக வழங்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு; 45 நாட்களுக்கு மேல்லாகி விட்டது ஆனாலும் சேதன உரங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை அதிகளவான விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளனர்.செய்கையை மேற்கொள்வதற்கு 10 நாட்களுக்கு முன்னரே நிலத்தைப் பண்படுத்தும் போது பயன்படுத்தும் சேதன உரமானது பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு 45 நாட்கள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு கிடைக்கவில்லை இதனால் கூடுதலான விவசாயிகள் பயிர் செய்கை மேற்கொண்டு 45 நாட்களே கடந்துள்ள நிலையில் எந்த உரத்தையும் பயன் படுத்தாத நிலை காணப்படுகின்றதுகடந்த 31ம் திகதி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தங்களுக்கு விரைவாக உரத்தை பெற்றுத் தருமாறு கோரியும் இந்தியத் துணைத் தூதரை கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க கடந்த பெரும் போகத்தில்; சேதனப் பசளை பயன்படுத்தி பயிர் செய்கை மேற்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கான இழப்பீடுகளை அரசாங்கம் வழங்கும் என்று அரசாங்கத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதில் ஒரு விவசாயிக்கு கூட அந்த இழப்பீடு இதுவரை கிடைக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது அதாவது மாவட்ட புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக விளைச்சல் கிடைக்கப் பெற்றதாக புள்ளிவிவரங்களில் காட்டப்பட்டுள்ள தாகவும் இதனால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அண்மையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (சு.பாஸ்கரன்)
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·