Ads

அல்வாய் மனோகரா முன்பள்ளியின் விளையாட்டு விழா

அல்வாய் மனோகரா முன்பள்ளியின் விளையாட்டு விழா பதிவுகள்

  • 925
  • More
  • 715
  • More
  • 708
  • More
  • 742
  • More
  • 755
  • More
  • 710
  • More
  • 725
  • More
Comments (0)
Login or Join to comment.
Added a news 
ஜம்மு காஷ்மீரில் உள்ள பெஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை அறிவித்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இன்று இந்தியா தொடர்பான முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களும் இடைநிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. குறிப்பாக, 1972ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து முக்கிய உடன்படிக்கைகளும் ரத்து என அறிவித்துள்ளது.பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடிவிட்டதாகவும், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் எண்ணிக்கையை 30-ஆக குறைக்கும் முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 210
Added a post 
இந்தியா - தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் உள்ளது அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில். பல ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த பழமையான கோவில் சோழர்களால் கட்டப்பட்டது ஆகும்இத்தல இறைவனின் பெயர் நீலகண்டேசுவரர் இறைவியின் பெயர் ஒப்பிலாமுலையாள் ஆகும். இத்தலத்தில் இறைவன் நீலகண்டேஸ்வரருக்கு செய்யப்படும் நல்லெண்ணய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அதை அப்படியே தன்னுள் உறிஞ்சிக்கொள்ளும் ஒரு அதிசய சிவலிங்கத்தை கொண்ட திருத்தலம்தான் திருநீலக்குடி சிவன் கோவில்.இங்குள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேக பொருளாக விளங்குவது நல்லெண்ணெய். பாத்திரம் பாத்திரமாக நல்லெண்ணையை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது.நாள் முழுவதும் எண்ணெய் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் உறிஞ்சப்பட்டு விடுகிறது.இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் சுவாமியை பார்த்தால் அவரது லிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தட வாதது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து உள்ள்து:அபிஷேகம் செய்யப்படும் எண்ணெ யெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இன்னும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்கு பதில் சொரசொரப்பாகவே இருக்கிறது.நாள் முழுக்க பாத்திரம் பாத்திரமாக ஊற்றப் படும் எண்ணெயை சிவலிங்கம் எப்படி உறிஞ்சுகிறது? உறிஞ்சப்படும் எண்ணெய்_என்ன ஆகிறது?இப்படி எந்த கேள்விகளுக்கான விடையும் இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை சிவன் உண்ட கதை நமக்கு தெரியும். அந்த நஞ்சின் விஷத் தன்மையை குறைக்க, சிவனின் தொண் டைப்பகுதியில், பார்வதி தேவி எண்ணை தேய்த்து தடவிவிட, விஷம் இறங்காமல் சிவனின் தொண்டையிலேயே நின்று விட்டது. இதை உணர்த்தும் விதமாகத்தான் இத் தலத்து இறைவனுக்கு திருநீலகண்டன் என்ற பெயர் உருவானதாக கூறப்படுகிறது. இதன்காரணமாகத்தான் இத்திருத்தலத்தில் சிறப்பு அபிஷேகமாக எண்ணையை பயன்படுத்தப்படுகிறது என்பது ஐதீகமாக உள்ளது
  • 229
Added a post 
ஒரு Electricity Board Office, வெளியில் ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார்…EB ஆபிஸர் : வாழைப்பழம் என்னப்பா விலை..?வியாபாரி : சார் , இதை எதுக்கு நீங்க வாங்குறீங்கன்னு தெரிஞ்சா தான் சார் விலை செல்ல முடியும்…?EB ஆபிஸர்: என்னப்பா சொல்ற, நான் எதுக்கு வாங்கினால் உனக்கு என்ன..?வியாபாரி: இல்லை சார் , நீங்க இந்த வாழைபழத்த கோயிலுக்கு வாங்கினா விலை 10 ரூபா ஒரு பழம்.குழந்தைகளுக்குனு வாங்கினா ஒரு பழம் 20 ரூபா. தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா. நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 30 ரூபா சார்…..EB ஆபிஸர்: யோவ், யாரை ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்…?வியாபாரி : இதுதான் என்னுடைய கட்டண விகிதம் (Tariff) சார்...E.B ஆபீசர்: 😳😳😳😳வியாபாரி: ஏன்டா கொய்யாலே…. நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே Transmission சிஸ்டம் வச்சிகிட்டு வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க….கேட்டா tariffனு சொல்லூவீங்க…Banana vendor rocked and EB officer shocked.
  • 242
Added a post 
கோதாவரி நதிக்கரையில் ஓர் ஆசிரமம். அதில் வேததர்மன் என்ற குரு இருந்தார். அவர் சிறந்த தபஸ்வி சீடர்கள் பலர் அவரிடம் கல்வி கற்று வந்தனர்.ஒரு நாள் அவர் தம்முடைய எல்லாச் சீடர்களையும் அழைத்து,''நான் போன ஜென்மங்களில் எத்தனையோ பாவங்கள் செய்துள்ளேன். என் தவத்தினால் இந்த பாவங்கள் எவ்வளவோ அழிந்துவிட்டன, இருந்தும் இன்னும் சிறிது மீதி இருக்கின்றன. இந்தப் பாவங்களின் பலனை நான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்காவிட்டால் இன்னொரு ஜென்மத்தில் அனுபவித்துத்தான் தீர வேண்டும். ஆகவே, காசிக்குச் சென்று இந்தப் பாவங்களை அனுபவிக்கப் போகிறேன். அப்பொழுது என்னை கவனித்துக் கொள்ள ஒரு சீடன் தேவை. யார் தயாராக இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.சாந்தீபகன் என்ற சீடன் "குருவே நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்'' என்றான்.''நான் இருபத்தொரு ஆண்டுகள் குருடனாகவும், நொண்டியாகவும், குஷ்டரோகியாகவும் இருப்பேன் உன்னால் எனக்குப் பணிவிடை செய்ய முடியுமா?'' என்று கேட்டார்.சாந்தீபகன் "குருவே நீங்கள் கவலைப்படவே வேண்டாம். உங்களைக் கவனித்துக் கொள்கிறேன். எப்படியாவது உங்கள் பாவங்கள் உங்களை விட்டு விலகினால் போதும்'' என்றான்.குருவும் சீடனும் காசிக்குச் சென்றார்கள். குரு மணிகர்ணிகை கட்டத்தில் (படித்துறையில்) குளித்துவிட்டு, விஸ்வேஸ்வரரை தரிசனம் செய்தார். உடனே அவர் குருடராகவும், நொண்டியாகவும், குஷ்டரோகியாகவும் மாறினார். சாந்தீபகன், அவர் உடலைத் துடைத்துவிடுவது, தினம் உணவு வாங்கி அதை குருவுக்குக் கொடுப்பது என்று இருந்தான். அவனுக்குக் கோயிலுக்குப் போகக்கூட ஓய்வு கிடைக்கவில்லை. இறைவனைப் பிரார்த்தனை செய்யவும் அவனுக்கு நேரம் போதவில்லை.வியாதியின் கடுமை அதிகரிக்க அதிகரிக்க குருவின் கோபமும் அதிகரித்தது. அவன் தம்மை சரியாகக் கவனிப்பதில்லை என்று கோபித்துக் கொள்வார். அவன் கொண்டு வரும் உணவு ருசியாக இல்லை என்று தூக்கி எறிவார்! சில சமயங்களில் அவனை அடிக்கவும் செய்வார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் குரு சேவையிலேயே அந்தச் சீடன் ஈடுபட்டிருந்தான். இதைக் கண்டு காசி விஸ்வநாதர் மனம் குளிர்ந்தார்.ஒரு நாள் சாந்தீபகன் முன்னால் தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன்" என்றார்.ஆனால் சாந்தீபகன் "குருவின் உத்தரவில்லாமல் நான் ஒரு வரமும் கேட்கமாட்டேன், ஒரு நிமிஷம் இருங்கள் இதோ நான் குருவைக் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று குருவிடம் சென்றான்.''காசி விஸ்வநாதர் எனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். நீங்கள் முன்போல் தேக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்று வரம் கேட்கட்டுமா குருவே'' என்று கேட்டான்.இதைக் கேட்டதும் குருவுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. "அடே மடையா என் உடல் குணமானால் என் பாவம் தொலையாது, அதை நான் அடுத்த ஜென்மத்தில் அனுபவித்துத் தீர வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா. ஏன், எனக்குப் பணிவிடை செய்வது உனக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அதற்காக இப்படி வரம் கேட்கப் பார்க்கிறாயா" என்று வெகு கடுமையாகச் சொன்னார்.உடனே சாந்தீபகன் திரும்பி வந்து "குரு ஒரு வரமும் கேட்கத் தேவையில்லை என்று சொல்கிறார்'' என்று காசி விஸ்வநாதரிடம் சொன்னான். இதைக் கண்டு அதிசயித்த சிவபெருமான் உடனே சாந்தீபகன் முன்னால் தோன்றி என்னிடம் ஏதாவது வரம் கேள் என்று சொன்னார்.சாந்தீபகன் சிவனைப் பார்த்து, "கடும் தவம் செய்கிறவர்களுக்குக் கூட தங்கள் தரிசனம் எளிதில் கிடைக்காதே அப்படி இருக்க, உங்களையே நினைக்காத எனக்கு எப்படி தரிசனம் கொடுத்தீர்கள்" என்று கேட்டான்.அதற்கு சிவன் ''நீ குருவுக்குச் செய்யும் தொண்டு எனக்குச் செய்யும் தொண்டாகும். மனைவி கணவனுக்குச் செய்யும் தொண்டு மக்கள் துறவிகளுக்கும் செய்யும் தொண்டு எல்லாம் எனக்குச் செய்த தொண்டுதான் ஆகவே என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.''எப்பொழுது குருவுக்குச் செய்யும் தொண்டு உங்களுக்குச் செய்யும் தொண்டு ஆகிறதோ நான் குரு சேவை ஒன்று செய்தாலே போதும், அதைக் கொண்டு நான் எல்லாம் பெற்றுவிடுவேன். ஆகவே என் குருபக்தி திடமாக இருக்க வேண்டும் என்று அருள் புரியுங்கள்" என்றான் சாந்தீபகன்.''அப்படியே'' என்று சொல்லி சிவபெருமான் மறைந்தார். இதைக் கேட்ட குரு மிக்க மகிழ்ச்சி அடைந்தார், அவர் சாந்தீபகனை வாழ்த்தினார் உன்னைப் போன்ற சிஷ்யனைக் கண்டு பிடிக்க முடியாது. நீ கோடீஸ்வரனாக மாறுவாய் வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் பெற்று, முடிவில் முக்தியையும் பெறுவாய் என்று வாழ்த்தி தாமும் பழையபடி திடகாத்திரம் உள்ளவராக மாறினார். அவர் நோயாளியாக மாறியதும் சாந்தீபகனைச் சோதிப்பதற்காகத்தான் அதில் தேர்ச்சியடைந்த சாந்தீபகன் நற்பேறு பெற்றான்.குருபக்தி எல்லா நன்மைகளையும் தரவல்லது. குருவருள் இல்லையேல் திருவருள் எப்போதும் கிடைப்பதில்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
  • 247
Added a post 
பேரரசர் அக்பர் ஒரு உணவு பிரியர் ... அவருக்கு எப்பொழுதும் உணவு சுவையாக இருக்க வேண்டும்உணவு சுவையாக இல்லையெனில் சமையல் காரர்களை ரொம்பவும் கடிந்து கொள்வார் ....!!!அக்பருடைய தொந்தரவு தாங்க முடியாமல் அரண்மனை சமையல் காரன், ஒருநாள் அக்பர் வேட்டைக்கு சென்று இருந்த நேரம் பார்த்து அரண்மனையை விட்டு ஓடிவிட முடிவு செய்தான்அரண்மனையை விட்டு கிளம்பும் நேரத்தில், அக்பர் மீது இருந்த கோபத்தில் ... அரண்மனை சமையல் கூடத்தில் இருந்த அரிசி, நெய், முந்திரி பருப்பு ஏலக்காய், இலவங்கம், மற்றும் எல்லா காய் கறிகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணியையும் ஊத்தி அடுப்பை மூட்டி விட்டு கிளம்ப தயாரானான்அப்பொழுதும் அவன் கோபம் தீரவில்லை அதனால் ஒரு பெரிய தட்டை வைத்து அந்த பாத்திரத்தை மூடி அதன்மேல் நெருப்பு சாம்பலை அள்ளி கொட்டி வைத்து விட்டு அரண்மனையை விட்டே ஓடி போய் விட்டான் ...வேட்டைக்கு சென்ற அக்பர் திரும்பி வந்து பார்க்கையில் சமையல் காரன் ஓடிப் போனது தெரியவந்தது வேட்டைக்கு சென்று திரும்பி வந்த பசியில் ஏதாவது சாப்பிட வேண்டுமே என்ற நினைப்பில் சமையலறையை சுற்றிவந்த அக்பருக்கு, ஓடிப் போன சமையல்காரன் செய்து வைத்து விட்டுப் போன நெருப்பு சாம்பலுடன் கூடிய பெரிய பாத்திரம் தெரிந்தது.நல்ல பசியில் இருந்த அக்பர் பாத்திரத்தின் மேல் இருந்த நெருப்பு சாம்பலை நீக்கிவிட்டு தட்டை திறந்து பார்க்கையில் நல்ல கம கமக்கும் வாசனை யுடன் கூடிய அரிசி உணவு நன்கு வெந்து தம் கட்டப் பட்ட நிலையில் உண்ணுவதற்கு சரியான பக்குவத்தில் இருந்தது.அக்பர் அந்த உணவை உண்டு விட்டு, அதன் சுவையில் மெய் மறந்து போனார். அதன் பிறகு அந்த சுவை மிகுந்த அந்த அரிசி உணவுக்கு ஓடிப்போன அந்த சமையல்காரர் பெயரையே சூட்டினாராம்அந்த சமையல்காரர் பெயர் தான் ..."பிரியாணி" உண்மையோ பொய்யோ ஆண்டவனுக்கும் அக்பருக்கும் தான் தெரியும்... எது எப்படியோ நமக்கு சாப்பிட நல்ல பிரியாணி கிடைச்சுது
  • 254
Added a news 
கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள பல மதுபான விற்பனை நிறுவனமான LCBO (Liquor Control Board of Ontario) கடைகளில் கடந்த ஒரு ஆண்டாக தொடர்ச்சியாக நிகழ்ந்த மது கொள்ளைகளுடன் தொடர்புடையதாக 42 வயதுடைய நபர் மீது 100க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.டொரண்டோ காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த கொள்ளைகள் 2024 ஏப்ரல் 13 முதல் 2025 ஏப்ரல் 11 வரை நடைப்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பெரிய அளவில் மதுபானங்களை திருடி, செலுத்தாமல் கடையைவிட்டு சென்றுள்ளார் எனவும் மொத்தமாக சுமார் $30,000 மதிப்புள்ள மதுபானங்கள் திருடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கில் LCBO விசாரணையாளர் குழுவுடன் இணைந்து செயற்பட்ட காவல்துறையினர், சந்தேகநபரை அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளனர். வீடற்றவரான குறிப்பிடப்படும் சத்வீர் சிங் தூர் (Satvir Singh Toor) என்பவருக்கு எதிராக இவ்வாறு 100க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து தகவல்கள் தெரிந்தவர்கள் 416-808-2300 என்ற எண்ணிலோ, அல்லது Crime Stoppers ஊடாக அநாமதேயமாகவும் தகவல் வழங்கலாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
  • 266
Added a news 
வத்திக்கானில் சனிக்கிழமை நடைபெறவுள்ள போப்பாண்டவர் பிரான்சிஸின் இறுதி சடங்கில், கனடாவை பிரதிநிதித்துவப்படுத்த ஆளுநர் நாயகம் மேரி சைமன் பங்கேற்கவுள்ளதாக கனடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.தற்போது மிகவும் முக்கியமான தேர்தல் சூழ்நிலை நிலவுவதால், நான் இந்த சடங்கில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், கனடா உயர்மட்டத்தில், சரியான முறையில் பிரதிநிதித்துவம் பெறுகிறது,” என கனடிய பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார். சைமனின் கணவர் விட்ட் ஃபிரேசர், மற்றும் செனட் சபாநாயகர் ரைமொண்ட் கான்யே ஆகியோரும் கனடா குழுவில் பங்கேற்பார்கள் என கனடா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இறுதி சடங்கு வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.கனடாவின் ஐந்து கார்டினல்களும் சடங்கில் பங்கேற்க உள்ளதாக டொரண்டோ வாள் ஆயர் கார்டினல் ஃப்ராங்க் லியோ கூறியுள்ளார். மேலும் பல ஆயர்களும், மனிடோபா மெடிஸ் கூட்டமைப்பின் தலைவர் டேவிட் சார்ட்ராண்ட் உள்ளிட்டவர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 269
  • 450
  • 450
  • 448
  • 450
Added a news 
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.000
  • 468
Added a news 
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட முன்னாயத்த செயலமர்வானது யாழ் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம்(23) காலை நடைபெற்றது.இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கிராம அலுவலர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் வாக்களிப்பு நிலையத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த பிரிவுக்குரிய கிராம அலுவலர்கள் வழங்கும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானதும் அத்தியாவசியமானதும்  எனவும் தெரிவித்தார்.அதேவேளை, இம்முறை வட்டாரத்திலேயே வாக்கெண்ணல் அமையவுள்ளதால் வாக்கெண்ணல் நிலையங்களையும் அமைக்கும் பொறுப்புக்கள் கிராம அலுவலர்களுக்கு உள்ளதால் பெளதீகச்சூழல் மற்றும் புறச்சூழலை போன்றவற்றை கருத்தில் எடுத்து வினைத்திறனான பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கடந்த இரண்டு தேர்தல்கள் கடமைகளில் ஈடுபட்ட கிராம அலுவலர்கள் எதிர்நோக்கிய இடர்பாடுகள் மற்றும் கருத்துக்களையும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டதுடன் அதற்குரிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் பொதுமக்களுக்கான கிராம அலுவலர்களின் சேவையானது மிக முக்கியமானது எனவும், நேர முகாமைத்துவம் பேணுவது அவசியமானது எனக் குறிப்பிட்டதுடன் ஒரு சில கிராம அலுவலர்களின் அசமந்த செயற்பாட்டால் அது ஒட்டுமொத்த கிராம அலுவலர்களின் சேவையினையும் பாதிப்பதாக அமைவதாகவும் குறிப்பிட்டு, கிராம அலுவலர்கள் பொது மக்களுக்கான அர்ப்பணிப்பான சேவையினை வினைத்திறனாக வழங்க வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் கிராம அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளர் இ.சசீலனால் விளக்கமளிக்கப்பட்டது.இச் செயலமர்வில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்000
  • 467
Added a news 
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. அத்துடன் நாளையதினமும் எதிர்வரும் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 6,48,490 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும், அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் அரச நிறுவனங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், புனித தந்ததாது கண்காட்சி இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காகக் கண்டியில் விசேட வாக்களிப்பு நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.000
  • 471
Added a news 
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. அத்துடன் நாளையதினமும் எதிர்வரும் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 6,48,490 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும், அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் அரச நிறுவனங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், புனித தந்ததாது கண்காட்சி இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காகக் கண்டியில் விசேட வாக்களிப்பு நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.000
  • 470
Added a news 
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 292 வாக்களிப்பு நிலையங்கள் தபால் மூல வாக்களிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள நிலையில் 21,064 பேர் யாழ். மாவட்டத்தில் தபால் மூலமாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்தினை தெரிவிக்கும் போது அவர் இந்த தகவலை வழங்கினார். யாழ். மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 243 வட்டாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. யாழ் மாநகர சபை, மூன்று நகர சபைகள்,13 பிரதேச சபைகளுக்குமாக 17 சபைகளுக்கு இந்த தேர்தல் நடாத்தப்படவுள்ளது.இந்த தேர்தலுக்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றது. மொத்த வாக்களார் எண்ணிக்கையாக 4,98140 பேர் காணப்படுகின்றனர்.இதேவேளை தபால் மூல வாக்களிப்பு நாளை மற்றும் நாளை மறுதினம் 24,25 மற்றும் 27,28 ஆம் திகதிகளில் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் நடாத்தப்படவுள்ளது.இதன்படி 292 வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் வாக்களிப்பு யாழ் மாவட்டத்தில் இடம்பெற காத்திருகின்றது. அதேவேளை வாக்களிப்பு கடமைகளுக்காக 292 அத்தாட்சி படுத்தல் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.யாழ். மாவட்டத்தில் 21ஆயிரத்து 64பேர் வாக்களிக்க அஞ்சல் வாக்களிப்புக்காக தகுதி பெற்றுள்ளனர். அஞ்சல் வாக்களிப்புக்காக விசேடமாக உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் பயிற்றுவிக்க பட்டுள்ளனர்.மேற்பார்வை நடவடிக்கைகளுக்காக 28வலயங்கள் தெரிவுசெய்யபட்டு வலய செயற்பாடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மேற்பார்வை செயற்பாடுகளுக்காக 240உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் நீதியானதும் சுதந்திரமானதும் தேர்தல் நடாத்த நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பு யாழில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 470
Added a post 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்தொழிலில் கூட்டாளிகளின் இடத்தில் அனுசரித்து செல்லவும். சுபகாரியங்களில் பொறுமை வேண்டும். பயனற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும். திட்டமிட்ட பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் ரிஷபம்நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகம் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சுபகாரியங்கள் பலிதமாகும். வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாகம் சார்ந்த திறமைகள் வெளிப்படும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மிதுனம்கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் மனம் விட்டு பேசுவது மாற்றத்தை உண்டாக்கும். தவறிய சில முக்கியமான பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த துறையில் திறமைகள் வெளிப்படும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் கடகம்இடமாற்றம் சார்ந்த விஷயங்களில் தாமதம் உண்டாகும். இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான தயக்கம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். உத்தியோகத்தில் மறைமுகமான வாய்ப்புகள் ஏற்படும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மௌனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீலம் சிம்மம்சந்தேகம் சார்ந்த உணர்வுகளால் குழப்பங்கள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும். எதையும் இருமுறை சிந்தித்து செயல்படுத்தவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கன்னிகடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். திறமைக்கான மதிப்பு உண்டாகும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு துலாம்திடீர் வரவுகளால் சேமிப்புகள் உயரும். குழந்தைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். பெரியோர்களின் சந்திப்புகள் மாற்றத்தை உண்டாக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் ஆதாயம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மேல்நிலை கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு சாதகமாகும். தடங்கல் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை விருச்சிகம்உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் தனுசுஎதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கமிஷன் வகையில் ஆதாயம் ஏற்படும். பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மகரம்இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கடன் சார்ந்த விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். சிக்கல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கும்பம்ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். வீடு மாற்றம் குறித்ததான சிந்தனை கைகூடும். விழிப்புடன் செயல்படுவதால் இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் வேண்டும். தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். தாமதம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மீனம்மனதளவில் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • 477
Added a post 
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை 24.4.2025.திதி : இன்று காலை 10.26 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.நட்சத்திரம் : இன்று காலை 06.50 வரை சதயம். பின்னர் பூரட்டாதி. நாமயோகம் : இன்று பிற்பகல் 12.25 வரை பிராம்யம். பின்னர் ஐந்திரம். கரணம் : இன்று காலை 10.26 வரை பாலவம். பின்னர் இரவு 09.53 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.59 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்காலை : 10.30 முதல் 11.30 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
  • 518
  • 536
  • 541
Good Morning
  • 541
  • 660
  • 671
  • 694
Added a news 
கனடாவில் பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு அதிகளவில் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஈஸ்டர் நீண்ட விடுமுறை நாட்களில் முன் கூட்டிய வாக்களிப்பு சாதனை அளவினை எட்டியுள்ளது. 7.3 மில்லியன் (73 இலட்சம்) கனடியர்கள் ஏப்ரல் 18 முதல் 21 வரையிலான நான்கு நாட்களில் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.ஒட்டாவா உள்ளிட்ட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள், குறிப்பாக பெரிய வெள்ளிக்கிழமை அன்று, வாக்குச்சாவடிகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிலர் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்ததாக அதிருப்தி வெளியிட்டனர்.முதல் நாளிலேயே 20 இலட்சம் பேர் வாக்களித்ததால் சில வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகளை விரைவில் மாற்ற வேண்டிய சூழ்நிலை தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டது. நாங்கள் அனைத்து தேர்தல் பணியாளர்களின் ஊக்கத்தையும், வாக்களித்த அனைவரின் பொறுமையையும் பாராட்டுகிறோம்,” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • 724
  • 733
இது சீன பூனை போல் இருக்கிறதா?
  • 732