சினிமா செய்திகள்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

விக்கிரகங்களை யாரும் வலுக்கட்டாயமாக வைக்க முடியாது என்று கூறுகின்ற ஜனாதிபதி ஏற்கனவே உள்ள விக்கிரகங்களை உடைப்பதற்கு எவ்வாறு அனுமதிகளை கொடுத்துள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்

விக்கிரகங்களை யாரும் வலுக்கட்டாயமாக  வைக்க முடியாது என்று கூறுகின்ற ஜனாதிபதி ஏற்கனவே உள்ள விக்கிரகங்களை உடைப்பதற்கு எவ்வாறு  அனுமதிகளை கொடுத்துள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முரசுமோட்டை வட்டார கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு நேற்று (08-04-2023) முரசுமோட்டை முருகன் கோவில் முன்றலில் நடைபெற்றுள்ளது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்நது உரையாற்றுகையில் இன்றைய நாட்டின் ஜனாதிபதி சொல்லுகின்றார் யாரும் விக்கிரகங்களை வலுக்கட்டாயமாக வைக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்இவ்வாறு கூறுகின்ற ஜனாதிபதி ஏற்கனவே பாரம்பரியமாக வழிபட்டு வந்த விக்கிரகங்களை உடைப்பதற்கான அனுமதிகளை கொடுக்கின்றார் குறிப்பாக குறுந்தூர் மலையிலே நீதிமன்றம் போட்ட கட்டளையை மீறி விகாரை அமைக்கப்படுகின்றது.

வெடுக்குநாறி மலையிலே விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளன இவ்வாறு தமிழர் வழிபாட்டிடங்களில் விகாரை அமைப்பதற்கு அவர் அனுமதித்துள்ளார்சிங்கள பௌத்த பேரினவாதம் எதைச் செய்தாலும் அவர் மௌனமாக இருப்பார் ஆனால் தமிழர்கள் எதையும் போய் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் அது வலுக்கட்டாயம் என்றும் தடுத்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நாங்கள் எங்களுக்கான சுயாட்சியை நிறுவுவதற்காக் நீண்ட நெடுங்காலமாக போராடி வருகின்றோம் அதற்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களை விலையாக கொடுத்திருக்கின்றோம் பலரை இழந்திருக்கின்றோம் பெறுமதி மதிப்பட முடியாத சொத்துக்களை இழந்திருக்கின்றோம் இதையெல்லாம் கடந்தும் இந்த மண்ணில் எமக்கான விடுதலை நோக்கிய பயணத்தில் ஒன்று சேர வேண்டும் என்று என்று குறிப்பிட்ட அவர்எமது அடையாளங்களை நாங்கள் பேண வேண்டும் என்பது எமக்கு முன்னால் உள்ள வரலாற்று ரீதியான கடமையாகும்.

மக்களை ஒரு குழப்பகரமான நிலையில் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக இளைஞர்களிடத்திலே ஒரு புதிய விதமான பிரச்சனை உருவாக்கப்பட்டு இருக்கிறதுஅதாவது இன்று போதைப்பொருள் பாவனை இப்பொழுது போதைப்பொருள் பாவனையினால் பல்வேறுபட்ட வன்முறை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.குறிப்பாக தாய் தந்தை பிள்ளைகளை கொலை செய்தல் போதைப் பொருள் பாவனைகளால் கலாச்சார சீரழிவு என பல்வேறு விதத்திலே எங்களுடைய இளம் சமூகம் சீரழிக்கப்படுகின்றது.

அதைவிட தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது இதை பலர் எதிர்க்கின்றனர் குறிப்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இதேபோல பலரும் எதிர்த்திருக்கின்றார்கள் உலக நாடுகள் பல எதிர்த்திருக்கின்றன இந்த அரசாங்கம் கொண்டுவரப் போகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் என்பது மிக மோசமானது.

ஒன்று கூடுவதோ அல்லது உரிமைகள் பற்றி பேசுவதற்கோ முடியாது எங்களது உரிமைகள் பற்றி பேச முடியாது இவ்வாறு பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்து மக்களை ஒரு நெருக்கடி நிலைக்குள் தள்ளி கொடுங்கோல் ஆட்சி மேற்கொள்ளவே இந்த அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முரசுமோட்டை வட்டார கிளையின் புதிய நிர்வாக தெரிவு இன்று (08-04-2023) பிற்பகல் 4.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கிளையின் செயலாளர் வீரபாகு விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.   குறித்த நிர்வாகத் தெரிவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மயில்வாகனம் நந்தகுமார் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 920
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads