Feed Item
Added a news 

கிளிநொச்சியில் வடமகான தொழில்துறை துணைக்களத்தின் வர்த்தக சந்தை (24-03-2023) ஆரம்பித்து வைக்கப்பட்டது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்; அதிகமாக இவ்வாறான உள்ளூர் உற்பத்தி பொருட்களினுடைய வருகை சற்று அதிகரித்து காணப்படுகின்றது.அத்துடன் உள்ளூர் உற்பத்தியாளர்களின் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் உற்பத்தியும் சற்று அதிகரித்து கானப்படுகின்றது.

நாங்கள் இவ்வாறான உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்ளளவு செய்து பயன்படுத்துகின்ற போது தொழில் முயற்சியாளர்களை மேலும் ஊக்குவிக்கும் இப்போது பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திகளை தவிர்த்து உள்ளுர் உற்பத்தி பொருட்களை பயன்படுத்தும் மனநிலைக்கு ஒவ்வொருவரும் மாற வேண்டும்.

அத்துடன் இந்த உற்பத்தி பொருட்கள் நல்ல தரமுடைய பொருட்களாகவும் அமைய வேண்டும் அவ்வாறு அமைகின்ற போது தான் அதற்கான சரியான சந்தை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வடமகான தொழில்துறை துணைக்களத்தினால் வர்த்தக சந்தை இன்று ஆரம்பிக்கப்பட்டது.  கிளிநொச்சி மாவட்ட செயலகமும் வடக்கு மாகாண தொழில் துறை துணைக்களத்தின் ஏற்பாட்டில பசுமை பூங்காவளாகத்தில் மேற்படி சந்தையானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நெசவு உற்பத்திகள் கைப்பணி உற்பத்திகள் உணவு உற்பத்திகள் ஆடை உற்பத்திகள் சிறு கைத்தொழில் உற்பத்திகள் உள்ளடங்கிய 60க்கும் மேற்பட்ட விற்பனைக்கூடங்களுடன் இந்த வர்த்தக சந்தை 24 March 2023 திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) திரு. ந.திருலிங்கநாதன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சி. ரீமோகனன்மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

  • 543