இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஐயம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலி ரெசா டெல்கோஷ் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்.
அதன் பின்னர், ஜனாதிபதி அவர்கள் ஈரான் தூதுவர் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு குறுகிய உரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
பின்பு அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில், ஈரான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் பதிவு செய்திருந்தார்.
இதனிடையே
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மறைந்த ஈரான் ஜனாதிபதி ‘இப்ராஹிம் ரைசி’ க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி, நடவடிக்கைகளின் ஆரம்பத்தில், எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச, மறைந்த ஈரான் ஜனாதிபதி ‘இப்ராஹிம் ரைசி’ மற்றும் பலர் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் இஸ்லாத்தின் படி சொர்க்க வாசல் திறக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர்கள் உட்பட அனைவரும் மறைந்த ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோரை நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது