சினிமா செய்திகள்
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ
கைதி படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தன மூலம் ரசிகர்கள் மனதில் அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அ
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒடேலா 2 (Odela 2) திரைப்படம், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது. அசோக் தேஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்
Ads
 ·   ·  2851 news
  •  ·  1 friends
  • 2 followers

2.2 மில்லியனை நெருங்கிய இலங்கையின் மொத்த சனத்தொகை - வடக்கில் பெரும் வீழ்ச்சி

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆய்வு செய்து புதிய தரவுகளை வெளிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்த அறிக்கை நேற்றையதினம் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் நாட்டின் மொத்த சனத்தொகையானது 21,763,170 என கணக்கிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், மக்கள் தொகை அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகை 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை விட 1,403,731 ஆக அதிகரித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள் தொகை 21,763,170 ஆகும். இது அண்ணளவாக சனத்தொகை 2.2 மில்லியனை நெருங்கியுள்ளதை காட்டுகிறது.

மாகாண ரீதியாக எடுத்துக் கொண்டால், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 28.1 வீதம் என்ற மிகப்பெரிய மக்கள் தொகை மேல் மாகாணத்தில் வசிக்கும் அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3 வீதம் வடக்கு மாகாணத்தில் வாழ்வதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்ட மட்டத்தில் மக்கள் தொகை பரவலைக் கருத்தில் கொள்ளும்போது, அதிக மக்கள் தொகை கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 2,433,685 ஆகும். இரண்டாவது இடத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் 2,374,461 பேர் வசிக்கின்றனர்.

அதன்படி, இந்த இரண்டு மாவட்டங்களிலும் மாத்திரம் தலா 02 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை வசிப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு மாவட்டங்களைத் தவிர, முன்னைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போன்று இம்முறையும், குருநாகல் 1,760,829, கண்டி 1,461,269, களுத்துறை 1,305,552, இரத்தினபுரி 1,145,138 மற்றும் காலி 1,096,585 ஆகிய மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை பதிவாகியுள்ளது.

அதேநேரம் முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மற்றும் வவுனியா மாவட்டங்கள் பதிவாகியுள்ளன.

முல்லைத்தீவில் 122,542 பேரும், மன்னாரில் 123,674 பேரும், கிளிநொச்சியில் 136,434 பேரும் வவுனியாவில் 172,257 பேரும் வசிக்கின்றனர்.

இதற்கிடையில், அதிகபட்ச சராசரி வளர்ச்சி விகிதம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது, இது 2.23 ஆகவும் பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டத்தில் மிகக் குறைந்த சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளதுடன், இது 0.001 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போலவே, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேர் என்ற அதிகபட்ச மக்கள் தொகை அடர்த்தி கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது. அங்கு மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தொகைமதிப்பு முதற்கட்ட அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் குடிசனம், குடிசன வளர்ச்சி மற்றும் மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை பரவல் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்திச் செயல்முறைக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க அரசாங்கம் அல்லாத ஏனைய நிறுவனங்களுக்கு இந்த குடிசன கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை.

குடிசன தொகைமதிப்பு வரலாற்றில்முதல் முறையாக, டெப்லெட் கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது விசேட அம்சமாகும்.

000

  • 454
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads