ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் உயிரிழப்பு - உறுதிப்பறுத்தியது அந்நாட்டு அரச ஊடகமான INRA
ஈரானின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியில் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான INRA உறுதிப்படுத்தியுள்ளது.
''ஈரானின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவர் மற்றும் அவருடன் பயணித்த அரச உயர் அதிகாரிகள் சென்ற ஹெலிகொப்டர் விபத்தில் வீரமரணமடைந்துள்ளார்" என INRA அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் விபத்திற்குள்ளான உலங்கு வானூர்தியில் பயணித்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடின உழைப்பாளி ஜனாதிபதி தனது தேசத்திற்கு சேவை செய்யும் பாதையில் இறுதி தியாகத்தை செய்துள்ளார் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000