சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒடேலா 2 (Odela 2) திரைப்படம், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது. அசோக் தேஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்
மேடையில் உண்மையை போட்டுடைத்தார் நடிகர் சிவகுமார்
சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.2019 ல் நடந்தது.சிவகுமா
நடிகர் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை
ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், வடிவேலு தனக்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தரவேண்டுமென்றும், அவரது படத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்தால் நன்றாக
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது."கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
Ads
 ·   ·  8164 news
  •  ·  5 friends
  • I

    9 followers

வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுகவினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் கழகத்தினர் கவனத்திற்கு… நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18-ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து கட்சியினர் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22-ஆம் தேதி தீரர் கோட்டமாம் திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம், ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கட்சியினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள்.

இதில் வாக்குச்சாவடி பாக முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான பயிற்சியினை நமது கட்சி சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும்.

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும்.

விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

  • 512
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads