மத்திய அமைச்சர் ஷோபாவின் வெறுப்புப் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களைத் தொடர்புபடுத்திப் பேசிய மத்திய அமைச்சர் ஷோபனாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அமைச்சர் ஷோபனாவின் வெறுப்புப் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்றும் தேர்தல் ஆணையம் உடனடியாக அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
"மத்திய பாஜக அமைச்சர் ஷோபாவின் பொறுப்பற்ற கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இது போன்ற கருத்துகளை முன்வைப்பவர் NIA அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது இத்தகைய கூற்றுகளை முன்வைக்க அவருக்கு அதிகாரம் இல்லை. பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழ் மற்றும் கன்னட மக்கள் ஏற்கமாட்டார்கள்" என்று முதல்வர் கூறியுள்ளார்.