பெண்களுக்கு முறையான சுகாதார வசதிகள் இல்லை - சஜித்
எமது நாட்டின் கல்வித்துறையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போது, இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கான பொய்யான அமைப்புகள் உருவாக்கப்பட்டு, ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் வீதியில் இறக்கப்படலாம். “சஜித்தின் இந்த முன்மொழிவுகள் இலவசக் கல்விக்கு தடையாக இருப்பதாக” புரட்சியாளர்கள் போலியான செய்திகளை உருவாக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரச பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குவதில் இலவசக் கல்வி பாதுகாக்கப்படுமா அல்லது அழிக்கப்படுமா என்பதை மக்கள் அறிவார்ந்த முறையில் சிந்தித்து அறிய வேண்டும்.
வெளிநாட்டு கொள்கைகளை கொண்டு வந்து கண்ணங்கரவின் இலவசக் கல்வியை சஜித் மாற்றியமைக்கிறார்’ என்று சொல்லும் அந்த புரட்சியாளர்களின் பிள்ளைகள் தனியார் பாடசாலைளிகளிலும், தனியார் பல்கலைக்கழகங்களிலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமது பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனங்களில் தரமான உயர்கல்வியைப் பெறும் போது, நாட்டின் ஏனைய பிள்ளைகளுக்கும் அதே தரமான உயர் கல்விக்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கும் போது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 124 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கொழும்பு, கடுவெலை, ஸ்ரீ சோமானந்த மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.