Ads
ஆசிய பசுபிக் மாநாட்டின் தலைவராக மஹிந்த அமரவீர
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டின் அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தலைவராக விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஆரம்பமான 37ஆவது ஆசிய பசுபிக் பிராந்திய ஆரம்ப அமர்வில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை இலங்கை மன்றத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் எனவும், அதற்கான பொறுப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads