பொலிஸ் தேர்வு அனுமதி சீட்டில் நடிகையின் புகைப்படம்
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் PC எழுத்துத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் நடந்துள்ளது.
காவல்துறையில் PC பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. இதற்காக அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. தேர்வர்கள் இந்த சீட்டு இருந்தால் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த வகையில், கன்னோஜ் திர்வா பகுதியில் உள்ள மையத்திற்காக வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டில், நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில காவல்துறை ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரியம் வழங்கியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், குறித்த அனுமதிச் சீட்டைக் கொண்டு யாரும் தேர்வு மையத்தில் யாரும் தேர்வு எழுத வரவில்லை என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் பொலிஸார் கூறுகையில், நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து யாரோ சிலர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.