போயிங் 737 விமானத்தை ஆடம்பர வில்லாவாக மாற்றிய நபர்
ஒரு விமானத்தை விடுமுறையை கழிக்கும் சொகுசு வில்லாவாக மாற்றிய நபரைக் கண்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவர் தனது எக்ஸ் கணக்கில் ஒரு சுவாரஸ்யமான காணொளியைப் பகிர்ந்துள்ளார்,
ஒரு விமானத்தை சகல வசதிகளுடன் கூடிய சொகுசு வில்லாவாக வடிவமைத்த ஒரு மனிதனின் காணொளி அது. இந்த வில்லா இரண்டு படுக்கையறைகள், குளியலறை, கழிவறை, பாத் டப், ஷவர், நீச்சல் குளம் என எல்லா ஆடம்பர வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த காணொளியை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, "சிலர் தங்கள் கற்பனைகளை யதார்த்தமாக மாற்றும் அளவுக்கு அதிர்ஷ்டசாலிகளாக உள்ளனர்.
மேலும் இந்த நபர் தன் கற்பனைக்கு எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதாகத் தெரியவில்லை! நான் எப்போதாவது இங்கு தங்குவதற்கு முன்பதிவு செய்வதில் ஆர்வமாக உள்ளேன்...." என்று கூறியுள்ளார்.
Felix Demin எனும் இந்த நபர் Bali-யில் உள்ள நியாங்-நியாங் கடற்கரைக்கு அருகில் இந்த விமான வில்லாவை வடிவமைத்துள்ளார்.
அவர் ஓய்வுபெற்ற ஒரு Boeing 737 விமானத்தை இவ்வாறு வடிவமைத்து அசத்தியுள்ளார். இங்கு தங்குவதற்கு 7,000 Dollars செலவாகும் என்று கூறப்படுகிறது.
நிச்சயமாக, எல்லோரும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால், விமானத்தையே சுகபோகமாக மாற்றிய இவரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடக பயனர்கள் இது அருமை, பகிர்ந்தமைக்கு நன்றி- இது மிகவும் சுவாரசியமானது, ஆச்சரியமானது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.