கட்புலனற்றோர் வாக்களிக்க விசேட வசதி
கட்புலனற்றோர் வாக்களிக்க விசேட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேல்தல்களின் போது வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் உதவியுடனேயே தற்போது அவர்கள் வாக்களித்து வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் Braille முறையில் அச்சிடப்பட்ட கட்சிகளின் பெயர்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய காகிதம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான விசேட மாதிரி வேலைத்திட்டம் நேற்று (16) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பார்வையற்றோர் மற்றும் பார்வையற்ற சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இப்புதிய வேலைத்திட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டு நடைமுறை சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் கட்புலனற்றோர், தனித்து வாக்களிக்கும் உரிமையை அனுபவிக்க முடியுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.