Ads
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000- காங்கிரஸ் வாக்குறுதி
கர்நாடகாவில் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் மாநாடுகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் மகளிர் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அந்த கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இல்லத்தரசிக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும். ’க்ருஹ லக்ஷ்மி' திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் 1.5 கோடி இல்லத்தரசிகள் பயனடைவார்கள்” எனக் கூறினார்.
Info
Ads
Latest News
Ads