சினிமா செய்திகள்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
Ads
 ·   ·  2869 news
  •  ·  1 friends
  • 2 followers

மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் தொடர்பல் ஆய்வு

பதினொரு வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கையை சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

2025 ஜனவரி 09 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் மற்றும் சதொச ஆகிய இரண்டு மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் மன்னாரில் ஊடகவியலாளர்களிடம் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட 27 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் பாலினம், வயது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கை சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

“கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஹேவகேயினால் பகுப்பாய்வு செய்யப்பட்ட 81 மனித எச்சங்களில் 27 மனித எச்சங்களுக்கான அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. வயது, பாலினம், இறப்புக்கான காரணம் போன்ற காரணங்களை உள்ளடக்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மிகுதி எச்சங்களுக்கான அறிக்கை ஆறு மாத காலத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.”

இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

சதொச மனித எலும்புக்கூடுகள் சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அடங்கிய 80 பெட்டிகள் பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

“ஏற்கனவே இணங்கியமைக்கு அமைய அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது. 76 - 156 வரையான 80 பெட்டிகள் சட்ட வைத்திய அதிகாரியின் மேலதிக பகுப்பாய்விற்காக நீதிமன்றத்தால் கையளிக்கப்பட்டுள்ளன. இதுத் தொடர்பிலான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.”

எலும்புகளை பரிசோதித்ததன் பின்னர் மரணத்திற்கான காரணம், வயது, பாலினம், குற்றச் செயல்களுடன் ஏதாவது தொடர்புகள் உள்ளனவா, என யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி கந்தையா பிரணவன் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த சட்டத்தரணி, எலும்புக்கூடுகள் அடங்கிய எஞ்சிய 75 பெட்டிகள் ஜனவரி 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் நீதிமன்றினால் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குற்றம் இடம்பெற் இடமாக கருதப்பட்டு மன்னார் சதொச மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருவதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச 190ஆவது நாள் அகழ்வு விசாரணையின்போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

மன்னார் சதொச புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட ஆறு எலும்புகளை ஆய்வு செய்த அமெரிக்காவின் மியாமியை தளமாகக் கொண்ட பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனம் (Beta Analytic Inc.) அவை கி.பி.1404 -1635ற்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளை சேர்ந்தது என தீர்மானித்தது.

ஜூலை 2019 இல், அந்த தீர்மானத்தை கடுமையாக நிராகரித்த களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்லியல் முதுகலைப் பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ, வெகுஜன புதைகுழியின் காலத்தைப் பற்றிய நம்பகமான தீர்மானத்திற்கு வரக்கூடிய வகையில், ஜூலை 2019 இல், மனித எலும்புகளுடன் தோண்டியெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்களில் புதிய விசாரணைகளை ஆரம்பித்தார்.

அப்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் சிலவற்றில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், ஒன்றாகக் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் எலும்புத் துண்டுகளும் மனித புதைகுழியில் காணப்பட்டன

000

 

  • 611
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads