சினிமா செய்திகள்
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்'வாழும் போது வருவோர்க்கெல்லாம்வார்த்தையாலே நன்றி சொல்வோம்.ப
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உண
ஆட்டம் போட்ட கௌதம் மேனன்
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகி
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தள
‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக
கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ?
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் வருக
ஜெயிலர் 2 ......வெளியான தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர்
சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி
குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம்
பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெ
Ads
 ·   ·  2208 news
  •  ·  1 friends
  • 1 followers

பொய்யுரைக்க வேண்டாம் - அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய எம்.பி தயாசிறி ஜயசேகர

ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். தற்போது இல்லை என்று குறிப்பிடுகின்றீர்கள். பொய்யுரைக்க வேண்டாம். இதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய்யர்களின் அரசாங்கம் என்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''மின்கட்டணம் குறைப்பு ஊடாக நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள்.

தேர்தல் காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய காலத்தில் மின்கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைப்பதாக வாக்குறுதியளித்தார்

5000 ரூபா கட்டணத்தை 3000 ரூபாவாகவும், 9000 ரூபாவை 6000 ரூபாவாகவும் குறைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் தற்போது கட்டணம் குறைக்கப்படவில்லை.

மின்சார சபை 167 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது. எவருக்கும் கடன் இல்லை ஆகவே மின்சார சபை கடன் என்று பொய்யுரைக்க வேண்டாம்.

6.1 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதாக மின்சார சபை முன்வைத்த முன்மொழிவை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்கழு இரத்துச் செய்து மின்கட்டண திருத்த முன்மொழிவை மீளாய்வு செய்யுமாறு மின்சார சபைக்கு அறிவுறுத்தியிருந்தது.

தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் 56 சதவீதம் நீர்மின்னுற்பத்தியின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறான நிலையில் ஏன் 6 மாத காலத்துக்கு மின்கட்டண திருத்தத்தை பிற்போட வேண்டும் என்பதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மின்கட்டணத்தை ஓரி நாட்களில் குறைப்பதாக குறிப்பிடவில்லை. 3 வருட காலப்பகுதிக்குள் மின்கட்டணத்தை நிலையான தன்மையில் பேணுதற்கும், மின் கட்டமைப்பை மேம்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டது என கூறியுள்ளார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த நவம்பர் மாதம் 09 ஆம் திகதி தம்புள்ளை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மின்கட்டணத்தை குறைப்பதாக குறிப்பிட்டார்.

தற்போது மின்கட்டணத்தை ஓரிரு நாட்களில் குறைப்பதாக குறிப்பிடவில்லை என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். ஏன் பொய்யுரைக்கின்றீர்கள், காலை முதல் இரவு வரை பொய்யை மாத்திரமே குறிப்பிடுகின்றீர்கள். இதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய்யர்களின் அரசாங்கம் என்று குறிப்பிடுகிறோம் என்று கூறியுள்ளார்.     

  • 99
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads