Ads
பாஜக ஆளும் மாநிலங்களுக்குத்தான் மத்திய அரசு நிதி வழங்குகிறது- மம்தா பானர்ஜி விமர்சனம்
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சாகர்தீகி நகரில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அப்போது, அவர் பேசுகையில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முதலிடத்தில் உள்ள மே.வங்க மாநிலம் மத்திய அரசின் நிதியின்றி மா நில அரசின் உதவியால் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் உதவியின்றி நாங்கள் இதைச் செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசு எங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும் என பலமுறை கூறியும் இன்னும் நிதி கிடைக்கவில்லை.
ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படுகிறது என மத்திய அரசின் மீது முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads