பள்ளி கல்வித்துறைக்கு குழந்தைகள் நல ஆணையம் திடீர் உத்தரவு
பள்ளி ஆசிரியர்களை சார் அல்லது மேடம் என அழைக்கக்கூடாது என்றும் டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறைக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆண் ஆசிரியர்களை சார் என்றும் பெண் ஆசிரியர்களை மேடம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரியின் அடிப்படையில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலின பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் எனவே இனி பள்ளி ஆசிரியர்களை சார் என்றோ மேடம் என்றோ அழைக்கக்கூடாது என்றும் பாலின பாகுபாடு இல்லாமல் இரு தரப்பினரையும் டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும் என்றும் இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் உரிய உத்தரவு அனுப்ப வேண்டும் என்றும் கேரள மாநில பள்ளி கல்வித்துறைக்கு குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆண் பெண் பாகுபாடுகள் குறித்த இந்த அறிவிப்பு கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது