Ads
இந்தியாவில் புதிதாக 171 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 121 ஆக இருந்த நிலையில் இன்று 171 ஆக உயர்ந்தது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரத்து 386 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 148 பேர் நலம் பெற்றுள்ளனர்.
இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 47 ஆயிரத்து 322 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,342 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 23 அதிகம் ஆகும். தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,722 ஆக நீடிக்கிறது.
Info
Ads
Latest News
Ads