Ads
ஒரே ஒரு நபரை 59 பெண்கள் சேர்ந்து கண்மூடித்தனமான தாக்குதல்
பெண் ஒருவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அனுப்பியதாக ஒரு நபர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை அடுத்து அந்த நபரை 59 பெண்கள் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கினர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் என்ற பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதி காவல்துறை 11 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். அந்தப் பெண்கள் அனைவரும் மதம் சார்ந்த ஒன்றின் பக்தர்கள் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
அந்த வீடியோவில் பெண் ஒருவர் காரில் இருந்து ஒரு ஆண் நபரை இழுத்து வெளியே தள்ளுகிறார். அதன்பிறகு அவரை ஈவு இரக்கமின்றி கண்மூடித்தனமாக சுற்றியுள்ள 59 பெண்கள் தாக்குகின்றனர்.
Info
Ads
Latest News
Ads