Ads
ஆம்புலன்சுக்கு பணம் தர முடியாமல், தாயின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற நபர்
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள கிராந்தி என்ற பகுதியைச் சேர்ந்த ஜாய் கிருஷ்ண தீவான். இவரது மகன் ராம் பிரசாத். ஜாய் கிருஷ்ணாவின் மனைவி லக்கி தீவானுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சமீபத்தி. ஜல்பாய்கூரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், சொந்த ஊருக்கு அவரது சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸை கேட்டுள்ளனர். இதற்கு ரூ.3000 கட்டணம் கேட்டதால், அதைத் தரமுடியாத நிலையில், தன் தாயின் சடலத்தை தோளில் சுமந்து சில் கிமீ தூரம் நடந்து வந்துள்ளார் ராம்பிரசாத்.
இதுகுறித்து ஒரு நபர் சமூகவலைதளத்தில் பதிவிட, ஒரு சமூக தொண்டு நிறுவனம் அப்பெண்ணின் உடலை சொந்து ஊருக்குக் கட்டணமின்றி கொண்டு சென்றது.
Info
Ads
Latest News
Ads