Ads
தஞ்சை பெரியகோவில் விமான கோபுரத்தில் ரசாயன கலவை
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் படிந்துள்ள பறவைகள் எச்சம் மற்றும் மழைநீரால் படிந்துள்ள பாசிகளை அகற்றும் பணி நடைபெற இருப்பதாகவும் இதனை அடுத்து கோவில் கோபுரத்திற்கு ரசாயன கலவையால் வர்ணம் பூசும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பழமை மாறாமல் தஞ்சை பெரிய கோவில் கோபுரத்திற்கு ரசாயன வர்ணம் பூசும் பணி நடைபெறுவது வழக்கம் என்ற நிலையில் விரைவில் அந்த பணி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads