Ads
வேலையில் இருந்து நீக்கியதால் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஊழியர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த ஊழியர் அனுப்சிங் என்பவரை அவரது மேலதிகாரி திடீரென வேலையில் இருந்து நீக்கி விட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த அனுப் சிங் தனது மேல் அதிகாரியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் திடீரென அலுவலகத்தில் நுழைந்து மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்டார். ஆனால் அவரது குறி தவறி மேலதிகாரியின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது.
இதனையடுத்து படுகாயம் அடைந்த அந்த மேலதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் வேலை இழந்த ஆத்திரத்தில் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட அனுப்சிங்கை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Info
Ads
Latest News
Ads