அழகு ராணி நாஸ் ஜோஷியின் வியக்கவைக்கும் கதை
நாஸ் ஜோஷி 2021-22 ஆம் ஆண்டு சர்வதேச திருநங்கை அழகி பட்டத்தை வென்றார். நாஸ் ஜோஷி கடின உழைப்பின் மூலம் வெற்றியை அடைய முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நாஸ் ஜோஷி டெல்லியில் பிறந்தார். நாஸ் தோற்றத்தில் ஒரு ஆணைப் போலத் தெரிந்தாலும் அவரது சைகைகளும் பாவனைகளும் பெண்களைப் போலவே இருந்தன.
நாஸ் திருநங்கை என்பதை அறிந்த குடும்பத்தினர் நாஸை அவரது தாய் மாமாவிடம் ஒப்படைத்தனர். 10 வயதில், நாஸின் தாய் மாமாவும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். நாஸ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,
அப்போது திருநங்கை ஒருவர் அவருக்கு உதவி செய்து தன்னுடன் அழைத்துச் சென்றார். அதன் பிறகு, நாஸ் பார்கள் மற்றும் மசாஜ் பார்லர்கள் உட்பட பல இடங்களில் பணிபுரிந்தார். பின்னர் அவர் பிழைப்புக்காக தெருக்களில் பிச்சை எடுத்தார். ஆனால் அத்தனை கஷ்டங்களையும் மீறி தனது படிப்பை தொடர்ந்தார், பேஷன் டிசைனிங் படிப்பை முடித்து வெற்றி பெற்றார். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் பட்டம் பெற்ற பிறகு, நாஸ் ஜோஷி 2013 இல் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவர் தனது மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார்.
நாஸ் டெல்லி தெருக்களில் பெண்களைப் போல உடை அணிந்து தைரியமாக போட்டோஷூட் செய்தார். இந்த போட்டோஷூட்டிற்குப் பிறகு, அவர் ஒரு பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார். போட்டோஷூட்டிற்குப் பிறகு, நாஸ் இந்தியாவின் முதல் சர்வதேச திருநங்கை அழகு ராணி ஆனார். நாஸ் தொடர்ந்து 3 முறை உலக அழகி பட்டத்தை வென்றார். இதுமட்டுமின்றி 8 அழகிப் போட்டிகளில் கிரீடத்தையும் நாஸ் வென்றுள்ளார். நாஸ் இந்தியாவின் முதல் திருநங்கை சர்வதேச அழகு ராணி ஆவார்.