Ads
வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு - போலீசார் விசாரணை
பிரதமர் மோடி கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவில் இருந்து நியூ ஜல்பைகுறி என்ற பகுதிக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இன்று காலை வந்தே பாரத் சென்று கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் ரயில் மீது கல் எறிந்தனர். இதனால் வந்தே பாரத் ரயிலில் உள்ள கண்ணாடி பெட்டி சேதமடைந்ததாகவும், இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ரயில் நிறுத்தப்பட்டு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் மீது கல்லெறிந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல் எறிந்ததால் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Info
Ads
Latest News
Ads