இந்த 6 நாடுகளில் இருந்து வந்தால் கொரோனா சான்றிதழ் கட்டாயம் – இந்திய அரசு அறிவிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் பலருக்கும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா அதிகம் பரவும் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் காட்டவேண்டியது அவசியம் என்றும், சான்றிதழ் பயணிப்பதற்கு 72 மணி நேரத்திற்குள்ளாக பெற்றதாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.